மலேசியா ஆசியாவின் புலியா! நிஜ புலிகளோடு ஒப்பிடாதீர்கள் - சட்டத்துறை முன்னாள் அமைச்சர்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஏப்ரல் 9: ஒரு தொலைநோக்குப் பார்வை கொண்ட பிரதமர் தலைமையில் மலேசியா "ஆசியாவின் புலி" அந்தஸ்தை அடைய முடியும் என்ற பெர்சாத்துவின் கூற்றுக்கு, சட்டத்துறை முன்னாள் அமைச்சர் ஜைட் இப்ராஹிம் இன்று பதிலளித்துள்ளார்.

சீனா, தென் கொரியா அல்லது சிங்கப்பூர் போன்ற "உண்மையான புலிகளுடன்" மலேசியாவை ஒப்பிட முடியாது என்று அவர் கூறினார்.

பெர்சாத்து உச்ச மன்ற உறுப்பினர் வான் அமாட் ஃபைசால் வான் அமாட் கமால், அத்தகைய பிரதமருக்குஇனம் மற்றும் மதத்தைத் தாண்டி அனைத்து மலேசியர்களையும் அணிதிரட்டும் தொலைநோக்குப் பார்வை இருக்க வேண்டும் என்று எஃப்எம்டிக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில் கூறியிருந்தார்.

இதற்குப் பதிலளித்த  ஜைட் இப்ராஹிம், வான் ஃபைசால் இதுபோன்ற கனவு காண்பதை நிறுத்த வேண்டும் கூறினார்.

ஒரு தொலைநோக்கு பார்வையாளராக தாம் நினைத்த பிரதமர் அன்வர் இப்ராஹிம் கூட தற்போதைய கொள்கைகளை அகற்ற விரும்பவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.

உண்மையான புலிகளுடன் நம்மை ஒப்பிடுவதை நிறுத்துங்கள். நமது அரசியல்வாதிகளும், பொதுச் சேவைத் துறையும் சிறந்தவையாக இல்லை. நம் கல்வி மற்றும் பொருளாதாரக் கொள்கைகள் பழமையானவை. ஊழல்வாதிகள் பாதுகாக்கப்படுகிறார்கள்.

தேர்ந்தெடுக்கப்பட்ட குழுக்களுக்கு நாம் முன்னுரிமை அளிக்கிறோம், ஆனால் அவர்கள் கேள்வி கேட்கப்படக்கூடாது என்ற நிலையில் இருக்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.

ஆசியப் புலிகள் என்ற சொல் 1980கள் மற்றும் 1990களில் வேகமாக வளர்ந்து வரும், தற்போது அதிக வருமானம் கொண்ட தைவான், தென் கொரியா, சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கின் பொருளாதாரங்களை விவரிக்கப் பயன்படுத்தப்பட்டது.

மலேசியா ஐந்தாவது "ஆசியப் புலி" என்று கூறப்பட்டது. ஆனால் அதன் பொருளாதார வளர்ச்சி 1997 ஆசிய நிதி நெருக்கடியால் தடம் புரண்டது!

Zaid Ibrahim menolak dakwaan Bersatu bahawa Malaysia boleh menjadi "Harimau Asia" dengan pemimpin berwawasan jauh. Beliau menyatakan Malaysia tidak setanding negara seperti China atau Korea Selatan, dan mengkritik dasar sedia ada serta amalan melindungi rasuah.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *