அமெரிக்காவுடனான பேச்சு தோல்வியுற்றால் மலேசியாவுக்கு மாற்றுத் திட்டம் தேவை!

- Muthu Kumar
- 06 May, 2025
கோலாலம்பூர், 6-
அமெரிக்காவின் வரிவிதிப்பு தொடர்பாக அந்நாட்டுடன் நடத்தப்பட்டு வரும் பேச்சுவார்த்தை தோல்வியில் முடியுமானால், மாற்றுத் திட்ட வியூகத்தை மலேசியா அமல்படுத்த வேண்டும்.அப்படிப்பட்ட ஒரு தெளிவான திட்டம் அரசாங்கத்திடம் உள்ளதா என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நேற்று கேள்வியெழுப்பினார்.
மலேசியாவின் இறக்குமதிப் பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள 24 விழுக்காடு வரி நாட்டின் பொருளாதாரத்திற்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று மாச்சாங் நாடாளுமன்ற உறுப்பினர் வான் அமாட் ஃபைஸால் வான் கமால் நேற்று எச்சரித்தார்.
வரி விதிப்பு விவகாரத்தில் அரசாங்கத்திடம் ஒரு தெளிவான வழிகாட்டி இல்லாத காரணத்தால் முதலீட்டாளர்கள் நம்பிக்கை தளர்ந்துள்ளனர். கடந்த மூன்று மாதங்களில்
மட்டும் ஆயிரம் கோடி வெள்ளி வெளிநாட்டு மூலதனம் நாட்டை விட்டு வெளியேறியுள்ளது.
கோலாலம்பூர் பங்குச் சந்தையும் வீழ்ச்சி கண்டுள்ளது என்று அவர் கூறினார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஏப்ரல் 2ஆம் தேதியன்று புதிய பரஸ்பர வரிகளை அறிவித்தார். ஆனால், அதற்கு தாமதமாகவே மலேசியா எதிர்வினையாற்றத் தொடங்கியது. அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தினால் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்து விடும் என்று அரசாங்கம் கருதுகிறது. ஆனால், டிரம்புடன் பேச்சு நடத்தி தீர்வு காண்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்று வான் அமாட் கூறினார்.
Ahli Parlimen Machang, Wan Ahmad Fayhsal, mempersoal ketelusan kerajaan dalam menghadapi cukai import 24% oleh Amerika Syarikat dan menegaskan perlunya pelan tindakan alternatif kerana pelabur mula hilang keyakinan serta ekonomi negara menunjukkan tanda kelembapan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *