இந்தியா - பாகிஸ்தானில் பயிற்சி பெற்று வரும் மலேசிய ராணுவ அதிகாரிகள் பாதுகாப்பாக உள்ளனர்!

- Muthu Kumar
- 09 May, 2025
கோத்தா திங்கி, மே 9-
இந்தியா, பாகிஸ்தானில் உள்ள இராணுவ கல்லூரிகளில் பயிற்சி பெற்று வரும், மலேசியாவைச் சேர்ந்த 21 ஆயுதப்படை அதிகாரிகளும் பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர்.இந்தியாவில் உள்ள பல்வேறு ராணுவ கல்லூரிகளில் 18 அதிகாரிகளும்,மலேசிய இராணுவப் படை
உறப்பினர்களும் பயிற்சி பெற்று வரும் நிலையில் மூவர் பாகிஸ்தானில் பயிற்சி பெறுவதாக அமைச்சர் டத்தோஸ்ரீ முஹமட் காலிட் நோர்டின் கூறினார்.
“தாக்குதல் மற்றும் மோதல்கள் நடைபெறும் பகுதிகளில் அவர்கள் ஈடுபடவில்லை. அவர்களில் பெரும்பான்மையானவர்களின் பயிற்சி இவ்வாண்டில் நிறைவடையும். எனவே, தற்போது அனைத்தும் பாதுகாப்பாக உள்ளது. ஆனால், நாங்கள் தொடர்ந்து கண்காணிப்போம்.” என்றார் அவர்.
Kota Tinggi, 21 pegawai dan anggota tentera Malaysia yang menjalani latihan di India dan Pakistan berada dalam keadaan selamat. Mereka tidak terlibat dalam serangan atau konflik, dan latihan mereka akan tamat tahun ini.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *