மஸ்ஜிட் இந்தியா தேவி ஸ்ரீ பத்ரகாளி அம்மன் ஆலயத்தில் தமிழ் மலர் உபயமும் ஓம்ஸ் தியாகராஜன் பிறந்தநாள் சிறப்பு பூஜையும்!

- Muthu Kumar
- 08 May, 2025
(எம். முருகன்)
கோலாலம்பூர், மே 8-
தலைநகர் மஸ்ஜிட் இந்தியா தேவி ஸ்ரீ பத்ரகாளி அம்மன் ஆலயத்தில் தமிழ் மலர் சார்பாக ஓம்ஸ் அறவாரியத்தலைவர் ஓம்ஸ் பா. தியாகராஜன் குடும்பத்தினர் ஏற்பாட்டில் சிறப்பு பூஜை நடைபெற்றது. அம்மனுக்கு அலங்காரமும் சிறப்பு பூஜைகளும் தீபாராதனையும் செய்யப்பட்டது.
தேவிஸ்ரீ பத்ரகாளி அம்மன் ஆலயத்திற்கு தமிழ் மலர் சார்பாக, என் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இந்த சிறப்பான ஏற்பாடு செய்த கோவில் நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஓம்ஸ் தியாகராஜன் கூறினார்.
இந்த ஆலயம் அண்மையில் சிறு சர்ச்சையில் இருந்தாலும் அரசாங்கம் ஒரு நல்ல முடிவை எடுத்து தீர்வு கண்டிருப்பது கண்டு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த ஆலயம் நூற்றாண்டு சிறப்பு வாய்ந்த ஆலயம் என்பதை அனைவரும்அறிவர். பக்தர்கள் அதிகமாக வருகை தந்து ஆதரவை தொடர்ந்து வழங்கி வர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
இந்த சிறப்பு பூஜையில் ஓம்ஸ் தியாகராஜனின் துணைவியார் திருமதி சந்திராதேவி தியாகராஜன், தமிழ்மலர் இயக்குநர் டத்தோ எஸ்.எம்.பெரியசாமி, அரிமா
இயக்கத்தின் பொறுப்பாளர் காஜாங் டத்தோ கலை, தமிழ் மலர் தலைமை ஆசிரியர் கு.தேவேந்திரன், தமிழ் மலர் நிர்வாகி மா.மதியழகன், உள்ளிட்ட பணியாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Pada 8 Mei, di Kuil India Devi Sri Pathrakali Amman, Kuala Lumpur, satu puja khas diadakan oleh Tamil Malar dengan kerjasama Oms Arvariya, yang dipimpin oleh Oms P. Thiagarajan dan keluarganya. Puja dan upacara lampu khas diadakan untuk dewi. Oms Thiagarajan mengucapkan terima kasih kepada pihak pengurusan kuil atas penganjuran acara sempena hari lahirnya. Walaupun kuil ini baru-baru ini menghadapi beberapa isu, dia mengucapkan terima kasih kepada kerajaan kerana menyelesaikannya.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *