“கிலிங்” வார்த்தையை தடை செய்வீர்- அரசுக்கு கெராக்கான் கோரிக்கை!

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா, ஏப். 25-

இந்தியர்களை இழிவுபடுத்தும் வகையில் பயன்படுத்தப்படும் “கிலிங்” எனும் வார்த்தையைத் தடைசெய்யும்படி அரசாங்கத்திற்கு கெராக்கான் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.இந்தியர்களைச் சிறுமைப்படுத்தும் அந்த வார்த்தை சமூக ஊடகங்களில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. அமைதியான ஒரு பல்லின நாட்டில் இதனை நாம் சகித்துக் கொள்ளக்கூடாது என்று அக்கட்சியின் தலைவர் டோமினிக் லாவ் கூறினார்.

எந்தவோர் இனத்தையும் சமயத்தையும் அவமதிக்கும் வகையிலான வார்த்கைளைப் பயன்படுத்துவது ஒரு நாட்டின் நல்லிணக்கக் கட்டுப்பாட்டை சீர்குலைத்து விடும். இனத்தையும் சமயத்தையும் பின்புலத்தையும் அவமரியாதை செய்யும் பேச்சை ஒடுக்குவதில் அரசாங்கம் தீவிரம் காட்ட வேண்டும். வெளியில் வந்து பார்த்தால்தான் விரிசல் எவ்வளவு மோசமாக உள்ளது என்பதை உணர முடீயும் என்று அறிக்கை ஒன்றின்வழி டோமினிக் லாவ் சொன்னார்.

Gerakan menggesa kerajaan haramkan penggunaan perkataan "keling" yang menghina kaum India. Ketua parti, Dominic Lau, menyatakan ia mencemarkan keharmonian negara pelbagai kaum dan kerajaan perlu tegas bendung ucapan berbaur perkauman demi perpaduan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *