இளைஞர்களுக்காக 500,000 மலிவு விலை வீடுகள்! – அன்வார்!

- Sangeetha K Loganathan
- 29 Apr, 2025
ஏப்ரல் 29,
18 வயது நிரம்பிய இளைஞர்கள் முதல் வீடு வாங்குவதை எளிமையாக்கும் வகையில் Rumah Belia MADANI வீட்டு வசதி திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவைப் பிரதமர் அன்வார் இன்று தொடக்கி வைத்தார். 6000 சதுர அடி பரப்பளவுடன் கூடிய அடுக்குமாடிக் குடியிப்புகள் இளைஞர்களுக்காக வழங்கப்படுவதாகவும் 200,000 ரிங்கிட் மதிப்பில் இந்த வீடுகள் விற்கப்படுவதாகவும் அன்வார் தெரிவித்தார். மொத்தம் 500,000 வீடுகளைக் கட்டும் திட்டமாகவும் இந்த ஆண்டுக்குள் அமல்படுத்தப்படும் என்றும் பிரதமர் அன்வார் தெரிவித்தார்.
இளைஞர்களுக்கான மலிவு விலை வீடுகள் எனும் திட்டம் 20 ஆண்டுகளுக்கு முன்னதாகத் தொடங்கப்பட்டது. ஆனால் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதற்கு காரணம் முறையானத் திட்டமிடலும் தகுதியானத் தலைவர்களும் இல்லாதது தான் என அன்வார் தெரிவித்தார். இப்போது இத்திட்டம் அடிக்கல் நாட்டு விழா வரையில் வந்துள்ளது. அரசு நிதியுடனும் தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடனும் இத்திட்டம் செயல் காணுவதாகப் பிரதமர் அன்வார் தெரிவித்தார்.
Perdana Menteri Anwar Ibrahim melancarkan projek Rumah Belia MADANI dengan sasaran membina 500,000 rumah mampu milik untuk belia berusia 18 tahun ke atas. Unit berharga RM200,000 akan dibina dengan kerjasama kerajaan dan sektor swasta.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *