மலாய்க்காரர்களின் RESERVE நிலங்கள் பாதுகாக்கப்படும்! – அன்வார் உறுதி!

top-news

ஏப்ரல் 25,

நகர்புற மேம்பாட்டுச் சட்டத்திருத்தில் மலாய்க்காரர்களின் நிலங்கள் அரசாங்கத்தால் ஒரு போதும் பறிக்கப்படாது என பிரதமர் அன்வார் உறுதியளித்தார். RUU PSB எனும் நகர்புற மேம்பாட்டு மசோதாவில் எந்தவொரு தனிநபரின் நிலங்களும் சொத்துகளும் அபகரிக்கப்படாது என்றும் அன்வார் வாக்குறுதியளித்தார். மேம்பாட்டுத் திட்டங்களை அமல்படுத்தும் முன்னர் அரசாங்கம் சம்மந்தப்பட்ட நிலத்தின் பின்புலத்தைச் சீராகக் கணக்காய்வு செய்த பின்னரே திட்டங்கள் அமல்படுத்தப்படும் என்றும் அன்வார் விளக்கமளித்தார்.

இந்த திட்டமானது முன்மொழியப்பட்டதற்கு முக்கியமானக் காரணம் பழமையான அடுக்குமாடிக் குடியிருப்புப் பகுதிகளில் இன்னமும் போதிய வசதிகள் இல்லாமல் இருப்பதாகவும் 50 ஆண்டுகளுக்கும் மேலாக PPR அடுக்குமாடிக் குடியிருப்புகள் பராமரிக்கப்படாமல் இருப்பதால் இந்த புதிய திட்டம் அமல்படுத்தபடவிருப்பதாக பிரதமர் அன்வார் தெரிவித்தார். எல்லோருக்கும் விசாலமானப் படர்ந்த வீட்டில் வாழ வேண்டும் என்கிற ஆசை இருக்கு. ஆனால் குறுகிய பகுதிக்குள் அடைப்பட்டு இருக்கும் நிலை தான் தலைநகரில் நிலவுவதாகவும் அன்வார் தெரிவித்தார்.

Perdana Menteri Anwar Ibrahim memberi jaminan bahawa tanah rizab Melayu tidak akan diambil di bawah RUU PSB. Kerajaan akan melaksanakan projek pembangunan hanya selepas kajian terperinci, bertujuan menaik taraf kawasan perumahan lama yang kurang kemudahan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *