புக்கிட் லாகோங்கில் மலையேறும் போது காணாமல் போன ஆடவர் கண்டுபிடிக்கப்பட்டார்!

- Muthu Kumar
- 08 May, 2025
கோம்பாக், மே 8-
புக்கிட் லாகோங்கில் மலையேறும் போது காணாமல் போனதாகக் கூறப்பட்ட ஆடவர் பாதுகாப்பான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். நேற்று காலை 6.50 மணிக்குக் கண்டுபிடிக்கப்பட்ட சம்பந்தப்பட்ட முகமட் டேனியல் ஸுல்கிப்ளி, (வயது 26) என்ற ஆடவரைத் தீயணைப்பு மீட்புத் துறையினர் வெளியே கொண்டு வந்ததாக அவரது அண்ணன், முகமட் இக்ராம் ஸுல்கிப்ளி (வயது 29) தெரிவித்தார்.
சம்பவத்தின் போது தம்பி தனது 2 நண்பர்களுடன் மலையேறச் சென்றார். மலை உச்சியிலிருந்து கீழே இறங்கிய போது தம்பி காணாமல் போனதை உணர்ந்த அவரது நண்பர்கள் போலீஸ் நிலையத்தில் மாலை 6.00 மணிக்குப் புகார் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து இச்சம்பவத்தை என் தாயாரிடம் இவர்கள் தெரியப்படுத்தினர் என்று செய்தியாளர்களிடம் பேசிய போது முகமட் இக்ராம் ஸுல்கிப்ளி குறிப்பிட்டார். இதனிடையே, இச்சம்பவம் தொடர்பில் காலை 6.08 மணிக்கு அழைப்பு வந்ததாக சிலாங்கூர் மாநிலத் தீயணைப்பு மீட்புத் துறையின் நடவடிக்கைப் பிரிவுத் துணை இயக்குநர் அகமட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார். இவரை வெளியே மீட்கும் நடவடிக்கையை செலாயாங் தீயணைப்பு படையினர் மேற்கொண்டனர்.
ஆகக் கடைசியாக முகமட் டேனியல் கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.41 மணிக்குத் தொடர்பு கொள்ளப்பட்டார். மலையின் மீது அவர் இருந்ததை பொதுமக்கள் கண்டுபிடித்து விட்டனர். அவரைக் கீழே இறக்கும் பணியைத் தீயணைப்பு படையினர் மேற்கொண்டதாக ஓர் அறிக்கையில் அகமட் முக்லிஸ் முக்தார் குறிப்பிட்டார்.
Seorang lelaki yang hilang ketika mendaki di Bukit Lagong telah ditemui selamat oleh pasukan bomba pagi semalam. Beliau ditemukan selepas usaha menyelamat dijalankan susulan laporan kehilangan yang dibuat rakannya.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *