வேப் தடை! கெடா மாநிலமும் பரிசீலிக்கும்! - சனூசி

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஏப்ரல் 28: கெடா அரசு அடுத்த வாரம் நடைபெறும் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் அம்மாநிலத்தில் வேப் விற்பனையைத் தடை செய்வது குறித்து விவாதிக்கும் என்று கெடா மந்திரி பெசார் சனுசி நோர் தெரிவித்துள்ளார்.

சிகரெட்டுகளுடன் ஒப்பிடும்போது வேப் பொருட்களால் ஏற்படும் பெரிய ஆபத்துகள் குறித்த தகவல்கள் கிடைத்துள்ள நிலையில், இது ஒரு தீவிரமான விஷயம் என்று அவர் கூறினார்.

திரெங்கானுவின் வழியைத் தாங்கள் பின்பற்ற விரும்புவதாகவும். சிகரெட்டுகளை விட வேப் பொருட்கள் மிகவும் ஆபத்தானவை என்று அவர்கள் கூறுவதாகவும் சனூசி சுட்டிக்காட்டினார்.

மின் சிகரெட் எனப்படும் அந்த வேப்களில் பல ரசாயனங்கள் உள்ளன. சிலர் (திரவத்தை) மருந்துகளுடன் கலக்கிறார்கள். இது மிகவும் ஆபத்தானது என்று அவர் சுங்கை பெட்டானியில் நடந்த ஒரு நிகழ்வில் தெரிவித்தார்!

Kedah akan bincang larangan jualan vape dalam mesyuarat minggu depan, kata Menteri Besar Sanusi Nor. Vape dikatakan lebih berbahaya daripada rokok, mengandungi banyak bahan kimia berbahaya. Kedah mungkin ikut langkah Terengganu larang jualan vape.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *