படகிலிருந்து கவிழ்ந்த கார்! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மாது!

- Shan Siva
- 09 May, 2025
கோலா கிராய், மே 9: நேற்று சுங்கை கிளந்தானில் படகு ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த கார் கவிழ்ந்ததில்,ஒரு பெண்மணி மயிரிழையில் உயிர் தப்பினார்.
Pangkalan Pasir Kelang கில் காலை 11 மணியளவில் நடந்த
சம்பவத்தில், 60 வயது
மதிக்கத்தக்க அந்தப் பெண், தனது கணவர்
படகுக் கட்டணத்தைச் செலுத்துவதற்காகக் காத்திருந்ததாகத் தெரியவந்துள்ளது.
சம்பந்தப்பட்ட புரோட்டான்
சாக கார் திடீரென முன்னோக்கி நகரத் தொடங்கியதாக Pasir Kelang படகுத் தலைவர் முகமது ஜாஃபரின் கூறினார்.
வாகனம் நகர்வதைக்
கண்ட கணவர், தனது மனைவி மீது
கயிற்றை வீசினார், அவர் சரியான
நேரத்தில் கதவைத் திறந்து பாதுகாப்பாகத் தப்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கணவர் இறங்கிய
பிறகு, அந்தப் பெண் தற்செயலாக
தானியங்கி கியரை நியூட்ரலுக்கு மாற்றியபோது, வாகனம் நகர்ந்ததாக நம்பப்படுகிறது,
பொதுமக்களும்
விரைந்து உதவியதாக அவர் கூறினார்.
சம்பவம் நடந்து சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு கார் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *