ஆயர் கூனிங் வெற்றி! BN - PH ஒத்துழைப்புக்கான வெற்றி! - புவாட் சர்காஷி

- Shan Siva
- 27 Apr, 2025
கோலாலம்பூர், ஏப்ரல் 27: நேற்று நடைபெற்ற ஆயர் கூனிங் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் பாரிசன் நேஷனல் (பிஎன்) பெற்ற வெற்றி, மாநிலத் தலைமை நிர்ணயித்த வாக்கு இலக்கை எட்டவில்லை என்றாலும், அது ஒரு உறுதியான வெற்றி என்று அம்னோவின் புவாட் சர்காஷி தெரிவித்துள்ளார்.
யுஸ்ரி பக்கீர் பெற்ற 11,065 வாக்குகள் பிஎன்-பக்காத்தான் ஹராப்பான் ஒத்துழைப்புடன் செயல்படுகிறது என்பதற்கான சான்று என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினருமான அவர் கூறினார்.
15வது பொதுத் தேர்தலில் (GE15) பெற்ற 9,088 வாக்குகளை விட 2,000 க்கும் மேற்பட்ட வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தாலும், அது இன்னும் ஒரு ஊக்கமளிக்கும் முடிவு என்று தாம் நினைப்பதாக அம்னோ மூத்த தலைவர் தஜுதீன் அப்துல் ரஹ்மான் ஏற்பாடு செய்த ஹரி ராயா ஐடில்ஃபிட்ரி திறந்த இல்ல உபசரிப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்!
Kemenangan BN di pilihan raya kecil Ayer Kuning dianggap kukuh walaupun tidak mencapai sasaran undi negeri, kata Puad Zarkashi. Yusri Pakir memperoleh 11,065 undi, membuktikan kerjasama BN-PH. Walaupun peningkatan undi kecil berbanding PRU15, keputusan ini tetap memberi semangat kepada parti.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *