மகனைக் கத்தியால் குத்திய தந்தைக்கு 7 நாள் தடுப்புக் காவல்!

- Shan Siva
- 03 May, 2025
கோத்தா பாரு, மே 3: பாசிர் மாஸ், போஹோன் தஞ்சோங்கில் உள்ள Kampung Banggol Che Dol எனும் இடத்தில் காய்கறி கத்தியால் தனது 11 வயது மகனை இரண்டு முறை குத்தியதாக சந்தேகிக்கப்படும் ஆண் ஆசிரியர் ஒருவர் இன்று முதல் ஏழு நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, சந்தேக நபர் காலை 8.44 மணிக்கு லாக்-அப் உடையில் கோத்தா பாரு
நீதிமன்ற வளாகத்திற்கு வந்தார்.
நேற்று, சிறுவன் தனது தந்தையால் மார்பு மற்றும் வயிற்றில் குத்தப்பட்டதாக செய்தி வெளியானது.
இதனை அடுத்து, பாசிர் மாஸ்
மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி காமா அசுரல் முகமது, காலை 9.08 மணிக்கு இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு
தகவல் தெரிவிக்கப்பட்டது என்று தெரிவித்தார்.
சந்தேக நபர்
மூன்றாவது முறையாக தனது மனைவியுடன் விவாகரத்து வழக்குகளில் ஈடுபட்டுள்ளதால், இந்த சம்பவம் குடும்ப நெருக்கடியால் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது என்று அவர்
கூறினார்.
சந்தேக நபர் மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுவதாகவும், 2008 முதல் மனநல சிகிச்சையைப் பெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்!
Seorang guru lelaki ditahan reman tujuh hari selepas disyaki menikam anak lelakinya berusia 11 tahun di Kampung Banggol Che Dol, Pasir Mas. Kes dipercayai berpunca daripada tekanan keluarga dan masalah mental yang dialaminya sejak tahun 2008.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *