ரவூப் நில ஆக்கிரமிப்பு-அரசு ஊழியர்களும் இடம்பெற்றுள்ள பட்டியல் எம்ஏசிசியிடம் உள்ளது!

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, ஏப். 30-

பகாங்கின் ரவூப் வனப் பகுதியில் நடந்துள்ள நில ஆக்கிரமிப்பில் சம்பந்தப்பட்டு உள்ளவர்களின் பட்டியல் மலேசிய லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணையத்திடம் (எம்ஏசிசி தற்போது இருக்கிறது.அப்பட்டியலில் பணி ஓய்வு பெற்றுவிட்ட மாநில அரசாங்க அதிகாரிகளும் அடங்கியுள்ளனர் என்று. எம்ஏசிசி தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அஸாம் பாக்கி அம்பலப்படுத்தியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் இதுவரையில் யாரும் கைது செய்யப்பட்டிருக்கவில்லை என்றும் அதில் சம்பந்தப்பட்டுள்ளவர்களை தேடும் நடவடிக்கைகளை எம்ஏசிசி விசாரணை அதிகாரிகள் தற்போது துரிதப்படுத்தி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதோடு, தேடப்படுவோரில். மாவட்ட இலாகா உட்பட நில மற்றும் கனிம இலாகாவில் பணி
புரிந்த அரசாங்க அதிகாரிகளும் அடங்குவர் என்றும் அஸாம் கூறியுள்ளார்.“இந்த விவகாரம் தொடர்பில் அடையாளம் காணப்பட்டுள்ளவர்களின் பட்டியல் எங்களிடம் இருக்கிறது.நில ஆக்கிரமிப்பு சம்பவம் நடந்து சுமார் 10 ஆண்டுகளாகி இருந்தால், அந்த அரசாங்க அதிகாரிகள் இப்போது நிச்சயமாக பணி ஓய்வு பெற்றிருப்பார்கள்.

"ஆதலால், அப்போது பணி புரிந்த அரசாங்க அதிகாரிகளின் பின்னணிகளை சரிபார்ப்பதற்கும் அவர்களை “தேடி கண்டு பிடிப்பதற்கும் காலஅவகாசம் தேவைப்படுவதால், எம்ஏசிசி விசாரணை அதிகாரிகளுக்கு அது ஒரு பெரிய சவாலாக இருக்கும்.“இதன் தொடர்பிலான விசாரணைக்காக, அந்நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மற்றும் எப்படி அவர்களால் அவ்வாறு செய்ய முடிந்தது என்பது குறித்த
தகவல்களைத் திரட்டுவதிலும் விசாரணை அதிகாரிகள் சவால்களை எதிர்நோக்குவார்கள்.

“விசாரணை செயல்பாட்டில் நியாயம் மிக முக்கியமானதாகவும் அடங்கி இருக்கிறது என்று.புத்ராஜெயாவில் உள்ள புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடந்த தென்கிழக்கு ஆசிய லஞ்ச ஊழல் ஒழிப்பு மாநாட்டை துவக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது அஸாம் இதனைத் தெரிவித்தார்.

ரவூப் நில ஆக்கிரமிப்பு சம்பவம் தொடர்பிலான விசாரணையைத் தொடருமாறு பகாங் மாநில எம்ஏசிசிக்கு அஸாம் உத்தரவிட்டிருந்ததாக இதற்கு முன்னர் கூறப்பட்டிருந்தது.நிர்வாகப் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதோடு மட்டுமல்லாமல், ரவூப்பில் நிலத்தை ஆக்கிரமிக்கும் தனிநபர்கள் இதுவரையில் எவ்வாறு 'சிக்கிக் கொள்ளாமல்' இருந்து வந்தனர் என்பது குறித்தும் எம்ஏசிசி ஆராய்ந்து வருகிறது என்று அசாம் தெரிவித்தார்.

"இந்த விவகாரத்தை நாங்கள் மிக கவனமாக விசாரணை செய்து வருகிறோம். நிர்வாகப் பிரச்சினை மட்டுமின்றி, இந்த விவகாரம் இது நாள் வரையில் எப்படி கண்டு கொள்ளப்படாமல் இருந்தது என்பது குறித்தும் விசாரணை செய்து வருகிறோம்" என்று அவர் கூறினார்.இதனிடையே, ரவூப் மூசாங் கிங் டுரியான் தோட்டத்தில் நடப்பட்டுள்ள டுரியான் மரங்கள் அனைத்தும் எட்டு முதல் ஒன்பது வயதுக்குட்பட்டவையாகத்தான் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக அஸாம் குறிப்பிட்டார்.

“அந்த டுரியான் மரங்களை தாங்கள் கடந்த 1974ஆம் ஆண்டிலிருந்து நடத் தொடங்கியதாக சில விவசாயிகள் கூறுகின்றனர். அவர்கள் கூறுவது உண்மையென்றால் இப்போது அவற்றின் வயது 40 முதல் 50 ஆண்டுகளாக இருக்க வேண்டும். ஆனால், அவற்றின் வயது எட்டு முதல் 9 ஆண்டுகள்தான் என்று நாங்கள் கண்டு பிடித்துள்ளோம்.“இதன் அடிப்படையில் பார்த்தால், இந்த நில ஆக்கிரமிப்பு அண்மையில்தான் நடந்திருக்கிறது என்பதை இது சுட்டிக் காட்டுகிறது என்று அஸாம் தெரிவித்தார்.

MACC kini memiliki senarai individu terlibat dalam kes pencerobohan tanah hutan di Raub, termasuk bekas pegawai kerajaan. Tiada tangkapan dibuat setakat ini. Siasatan menunjukkan pokok durian ditanam kurang dari 10 tahun, menafikan dakwaan penanaman sejak 1974.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *