மகனைக் கத்தியால் குத்திய தந்தை கைது!

top-news

மே 3,

11 வயது மகனைக் கத்தியால் குத்திய தந்தை நேற்றிரவு கைது செய்யப்பட்ட நிலையில் இன்று KOTA BHARU MAJISTRET நீதிமன்றம் கைது செய்யப்பட்ட 47 வயது தந்தையை 7 நாள்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது. PASIR MAS மாவட்டத்தில் KAMPUNG BANGGOL CHE DOL குடியிருப்புப் பகுதியில் உள்ள வீட்டிலிருந்து நேற்று மாலை 11 வயது சிறுவன் கத்திக் குத்து காயத்துடன் மீட்கப்பட்டதாக PASIR MAS மாவட்டக் காவல் ஆணையர் KAMA AZURAL MOHAMED தெரிவித்தார். 

பாதிக்கப்பட்ட 11 வயது சிறுவனின் நெஞ்சிலும் வயிற்றிலும் கத்தியால் குத்தப்பட்டுள்ளதாகவும் வீட்டிலிருந்த காய்கறி வெட்டும் கத்தியால் 47 வயது தந்தை அச்சிறுவனைக் குத்தியதாகவும் முதற்கட்ட விசாரதையில் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட 47 வயது ஆடவர் இன்று முதல் மே 9 வரையில் நீதிமன்ற விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் பாதிக்கப்பட்ட சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் PASIR MAS மாவட்டக் காவல் ஆணையர் KAMA AZURAL MOHAMED தெரிவித்தார்.

Seorang bapa berusia 47 tahun ditahan kerana menikam anak lelakinya yang berusia 11 tahun dengan pisau dapur di Kampung Banggol Che Dol, Pasir Mas. Suspek direman tujuh hari manakala mangsa sedang dirawat di hospital.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *