பெரிக்காத்தான் & பாரிசான் கூட்டணி? அது பகல் கனவு! – ZAHID விளக்கம்!

top-news

ஏப்ரல் 25,

பாரிசானும் பெரிக்காத்தானும் இணைந்து தேர்தல் கூட்டணி அமைக்கவிருப்பதாகவும் பேராக் மாநிலத்தில் இணைந்து ஆட்சி அமைக்கப்போவதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் பெரிக்காத்தானின் பகல் கனவுகளில் ஒன்று என பாரிசான் தலைவரும் துணைப்பிரதமருமான Datuk Seri Dr Ahmad Zahid Hamidi தெரிவித்தார். பெரிக்காத்தான் கட்சிக்குப் பல கனவுகள் உள்ளது. அது எல்லாமும் பகல் கனவாகவே இருக்கிறது.

நானும் கனவுகள் கண்டிருக்கிறேன், ஆனால் நான் விழித்துக் கொண்டேன். மலேசியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நான் விழித்துக் கொண்டேன். அவர்கள் இன்னமும் பகல் கனவில் சுகம் காணுகின்றனர் என Datuk Seri Dr Ahmad Zahid Hamidi நகைச்சுவையாகத் தெரிவித்தார். தேர்தலுக்கு முன்னதாக அரசியல் கட்சிகள் கூட்டணி வைப்பதற்கு அரசியல் காரணங்கள் பல இருந்தாலும் தேர்தலுக்குப் பின அமையும் கட்சிகளின் கூட்டணிக்கு ஒரே காரணம் தான் இருக்க முடியும். அது மக்கள் நலன். மக்கள் நலனை முதன்மையாகக் கொண்டு ஆட்சி அமைக்கப்பட வேண்டும் என்கிற ஒரே காரணம் தான் என Datuk Seri Dr Ahmad Zahid Hamidi விளக்கமளித்தார்.

Datuk Seri Zahid Hamidi menafikan dakwaan gabungan antara Barisan dan Perikatan di Perak sebagai angan-angan kosong. Beliau menegaskan bahawa gabungan selepas pilihan raya hanya wajar jika demi kebajikan rakyat, bukan kerana kepentingan politik semata-mata.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *