வாசலில் தொப்புள் கொடியுடன் கைவிடப்பட்ட குழந்தை மீட்பு!

- Sangeetha K Loganathan
- 07 May, 2025
மே 7,
நேற்றிரவு தொப்புள் கொடியுடன் கைவிடப்பட்ட குழந்தையை 60 வயது முதியவர் தனது வீட்டு வாசலில் கண்டெடுத்ததாகச் செகாமாட் மாவட்டக் காவல் ஆணையர் Ahmad Zamry Marinsah தெரிவித்தார். இரவு 7.45 மணிக்கு குழந்தையின் அழுகுரல் கேட்டதாகவும் குழந்தையைச் சுற்றியும் எறும்புகள் மொய்த்ததால் குழந்தையைச் சுத்தம் செய்த பின்னர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் 60 வயது முதியவர் தெரிவித்தார்.
மீட்கப்பட்ட குழந்தை பிறந்து 4 மணி நேரங்களே ஆகியிருப்பதாகவும் தற்போது செகாமாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செகாமாட் மாவட்டக் காவல் ஆணையர் Ahmad Zamry Marinsah தெரிவித்தார். குழந்தை தொடர்பான எந்தவொரு விவரங்களும் இன்னும் கண்டறியப்படாத நிலையில் பொதுமக்கள் யாரேனும் சந்தேகத்திற்குரிய நபர்களைக் கண்டால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படி செகாமாட் மாவட்டக் காவல் ஆணையர் Ahmad Zamry Marinsah கேட்டுக் கொண்டார்.
Seorang bayi yang masih bertali pusat ditemui di hadapan rumah seorang warga emas di Segamat. Bayi itu dipercayai baru lahir empat jam dan kini dirawat di hospital. Polis meminta maklumat daripada orang ramai bagi membantu siasatan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *