செம்பனை தோட்டத்தில் 410 கிலோ முதலை!

- Sangeetha K Loganathan
- 07 May, 2025
மே 7,
ஜொகூர் பத்து பஹாட்டில் உள்ள செம்பனை தோட்டத்தில் 410 கிலோ எடையிலான முதலையைப் பாதுகாப்பு அதிகாரிகள் வெற்றிகரமாக பிடித்தனர். பத்து பஹாட்டில் உள்ள Kampung Parit Gantong செம்பனை தோட்ட தொழிலாளர்கள் காலை 10.30 மணிக்கு முதலையைக் கண்டதும் பாதுகாப்பு ஆணையத்திடம் தகவல் தெரிவித்ததாக பெங்காரம் மாவட்ட மீட்பு ஆணைய இயக்குநர் Mohd Nur Eddy Paiman தெரிவித்தார்.
மீட்புப் படை அதிகாரிகள் பாதுகாப்பு அதிகாரிகள் பொதுமக்களின் உதவியுடன் சம்மந்தப்பட்ட முதலையைப் பிடித்ததாகவும் பிடிக்கப்பட்ட முதலை பெண் முதலை என அடையாளம் காணப்பட்டிருப்பதால் சம்மந்தப்பட்ட செம்பனை தோட்டத்தில் முதலை இனப்பெருக்கம் செய்துள்ளதா என்பதையும் ஆராய்ந்து வருவதாக Mohd Nur Eddy Paiman தெரிவித்தார். முதலையின் எடை 410 கிலோ என்றும் 4.5 மீட்டர் நீளம் என்றும் அளவிடப்பட்டுள்ளது.
Seekor buaya betina seberat 410 kilogram dan sepanjang 4.5 meter berjaya ditangkap di ladang kelapa sawit di Kampung Parit Gantong, Johor. Operasi melibatkan pasukan penyelamat, pegawai keselamatan dan penduduk. Siasatan lanjut mengenai pembiakan buaya sedang dijalankan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *