மலையேறும் போது மூச்சுத் திணறியதால் ஆடவர் பலி!

top-news

ஏப்ரல் 30,

பேராக்கின் பிரபல விளையாட்டுப் போட்டியான Bukit Larut மலையேறும் போட்டியில் பங்கேற்ற 50 வயது உள்ளூர் மலையேறி மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் மயங்கி விழுந்து உயிரிழந்ததாகப் பேராக் மாநில மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Sabarodzi Nor Ahmad தெரிவித்தார். இன்று காலை 10.40 மணிக்கு அவசர அழைப்பைப் பெற்றதும் Bukit Larut பகுதியில் இருந்த மீட்புப் படையினர் மலையின் மேல் ஏறி மயங்கிய ஆடவரை மீட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலுதவிகளையும் சிகிச்சைகளையும் சுகாதார அதிகாரிகளால் வழங்கப்பட்டும் அவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்புப் படையினர் சுமார் 3 கிலோ மீட்டர் பயணித்து மயங்கிய ஆடவரை மீட்டதாக பேராக் மாநில மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Sabarodzi Nor Ahmad தெரிவித்தார். மயங்கிய ஆடவர் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மலையேறும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தததாகத் தெரிய வந்துள்ளது.

Seorang lelaki, Ahmad Saharim Saudi, 50, meninggal dunia akibat sesak nafas semasa menyertai aktiviti mendaki di Bukit Larut, Taiping. Mangsa disahkan meninggal dunia di lokasi oleh petugas KKM dan mayat dibawa turun dengan bantuan pihak bomba.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *