வாகனத்திலிருந்து வீசி மனைவியைக் கொன்ற கணவன்! – SHAH ALAM!

top-news

மே 7,

நேற்று மாலை ஷா அலாம் KESAS நெடுஞ்சாலையின் ஓரத்திலிருந்து ஒரு பெண்ணின் சடலத்தைக் காவல்துறை மீட்ட நிலையில் சம்மந்தப்பட்ட பெண்ணின் கணவர் என நம்பப்படும் ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளதாக Cheras, மாவட்டக் காவல் ஆணையர் Aidil Bolhassan தெரிவித்தார். கணவன் மனைவிக்கும் வாகனத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தால் மனைவியை ஓடும் வாகனத்திலிருந்து தள்ளி விட்டதாகக் கைது செய்யப்பட்ட ஆடவர் ஒப்புக் கொண்ட நிலையில் அவரைக் கைது செய்துள்ளதாக Aidil Bolhassan விளக்கமளித்தார்.

உயிரிழந்த பெண் 50 வயது உள்ளூர் பெண் என அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில் அவரின் உடல் அவரின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட ஆடவரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் methamphetamine, amp, benzo, என 3 போதைப்பொருள்கள் பயன்படுத்தியிருப்பதைக் காவல்துறை உறுதி செய்துள்ளதாகவும் அவர் மீது முன்னமே 3 குற்றச் சம்பவங்கள் நிலுழையில் இருப்பதாகவும் Cheras, மாவட்டக் காவல் ஆணையர் Aidil Bolhassan தெரிவித்தார்.

Seorang lelaki ditahan selepas didapati menolak isterinya keluar dari kenderaan yang sedang bergerak di lebuh raya KESAS, Shah Alam, menyebabkan kematian wanita tempatan berusia 50 tahun itu. Suspek disahkan positif dadah dan mempunyai rekod jenayah lampau.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *