KL-Seremban Expressway சாலையில் விபத்து - மூன்று இந்தியர்கள் பலி!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மே 2: கோலாலம்பூர் – சிரம்பான் விரைவுச்சாலையில் ஒரு கார் நெடுஞ்சாலை வெளியேறும் பிரிவின் மீது மோதியதில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

இதனை அடுத்து, சுங்கை பீசி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த 10 பேர் கொண்ட குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.

மேலும் மோசமாக சேதமடைந்த வாகனத்திலிருந்து அவர்களை அகற்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் எடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை 6.07 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்தபோது, ​​டொயோட்டா வியோஸ் கார் சாலையை விட்டு விலகி மோட்டார் பாதையில் உள்ள வெளியேறும் பிரிவின் மீது மோதியதை குழு கண்டறிந்ததாகத் அக்குழு கூறியது.

வாகனத்தில் சிக்கிய மூன்று பேரும் இந்திய ஆடவர்கள் என்று தெரியவந்துள்ளது. அவர்கள் மூவரும் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக மருத்துவப் பணியாளர்கள் உறுதி செய்தனர்!

Tiga lelaki warga India maut selepas kereta Toyota Vios terbabas dan melanggar laluan keluar di lebuh raya KL-Seremban. Pasukan bomba ambil masa sejam keluarkan mangsa. Ketiga-tiganya disahkan meninggal dunia di tempat kejadian oleh petugas perubatan.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *