தொகுதித் தேர்தல் முடிவுகளை பிகேஆர் உறுதிப்படுத்தியது!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மே 6-

அண்மையில் நடந்து முடிந்த பிகேஆர் கட்சியின் தொகுதித் தேர்தலின் முடிவுகளை அக்கட்சியின் மத்திய தலைமைத்துவ மன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. அதில் அதன் உதவித் தலைவர் நிக் நஸ்மி நிக் அஹ்மாட்டின் தோல்வியும் அடங்கும்.

தொகுதித் தேர்தல் முடிவுகள் குறித்த இறுதி முடிவுகள், கட்சியின் அகப்பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதாக, பிகேஆர் தலைமைச் செயலாளர் ஃபூசியா சாலே தெரிவித்தார்.அடுத்து நடைபெற விருக்கும் கட்சியின் மத்திய தலைமைத்துவ மன்றத் தேர்தலுக்கான கட்சியின் புதிய “விகிதாச்சார பிரதிநிதித்துவ" முறையானது, அத்தேர்தலுக்காக பேராளர்களை அனுப்பி வைக்க, தொகுதித் தேர்தல்களில் தோல்வியுற்றிருப்போருக்கு அனுமதி அளிக்கும் என்றும் அவர் கூறினார்.

கடந்த மாதத்தில் நடைபெற்று முடிந்த தொகுதித் தேர்தல்களில் கட்சியின் முக்கிய நடப்புத் தலைவர்களில் பலர் தோல்வியுற்றிருந்தனர். அதோடு, கட்சியின் சாதாரணமான உறுப்பினர்கள் பலர் புதிய தொகுதி தலைவர்களாக வெற்றி பெற்றிருக்கின்றனர்.நிக் நஸ்மியை தவிர்த்து, பிரிவுத் தலைவர் அடாம் அட்லி, அக்மால் நசீர், சில நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் தோல்வியடைந்தனர்.

ஆட்சேபங்கள் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த வாரத்தில் நான்கு தொகுதிகளில் மறுதேர்தல்கள் நடத்தப்பட்டன.
அவற்றில், கட்சியின் தகவல் பிரிவுத் துணைத் தலைவர் சுவா வேய் கியாட் மற்றும் காப்பார் நாடாளுமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினர் ஜி. மணிவண்ணன் ஆகியோர் வெற்றி பெற்றிருந்தனர்.

இதற்கு முன்னர், முறையே செலாயாங் மற்றும் ஜெம்போல் தொகுதிகளில் போட்டியிட்ட இவர்கள் இருவரும் தோல்வியுற்றதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

PKR telah mengesahkan keputusan pemilihan cabang parti, termasuk kekalahan Timbalan Naib Presiden Nik Nazmi. Beberapa pemimpin utama tewas, manakala ahli biasa menang. Empat cabang mengadakan pilihan raya semula atas bantahan, menyaksikan dua calon utama akhirnya menang.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *