D.A.P ஒரு தேவையில்லாத கட்சி! பிரிவினை என்றால் அது டி.ஏ.பி! – சனூசி சாடல்!

- Sangeetha K Loganathan
- 25 Apr, 2025
ஏப்ரல் 25,
டி.ஏ.பி கட்சியால் தான் மலேசியாவில் பிரிவினைகள் அதிகரித்து வருவதாகவும் மலேசியாவுக்கு டி.ஏ.பி தேவையில்லாத கட்சி என்றும் கெடா மாநில மெந்திரி பெசாரும் பாஸ் கட்சியின் தேர்தல் நடவடிக்கைக் குழு தலைவருமான Dato’ Muhammad Sanusi Md Nor சாடினார். நாளை நடைபெறவிருக்கும் Ayer Kuning சட்டமன்ற இடைத்தேர்தலோடு டி.ஏ.பி கட்சியின் இறுதி அத்தியாயம் எழுதப்பட வேண்டுமென Sanusi தெரிவித்தார். நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து நடைமுறையில் இருந்த இஸ்லாமியர்களுக்கான முன்னுரிமைகள் டி.ஏ.பி எனும் கட்சியால் மட்டுமே இதுவரையில் எதிர்க்கப்பட்டு வருவதாகவும் கடந்த 2 ஆண்டுகளில் டி.ஏ.பியின் ஆட்டம் அதிகாரத்தின் வாயிலாக இஸ்லாமியர்களுக்கு எதிராக இருப்பதாகவும் Sanusi குற்றம்சாட்டினார்.
1963 டி.ஏ.பி கட்சி தோற்றுவிக்கப்பட்டதிலிருந்து தொடர்ந்து இனங்களுக்கிடையிலானச் சச்சர்வுகளுக்குப் பின்னால் டி.ஏ.பி இருந்து வந்ததாகவும் 1969 மே 13 இனக்கலவரத்தில் டி.ஏ.பி முக்கிய பங்கு வகித்திருப்பதாகவும் Sanusi குற்றம்சாட்டினார். இப்போது மீண்டும் டி.ஏ.பி மலேசியாவின் அதிகாரப்பூர்வமான இஸ்லாத்தை ஒதுக்கும் நடவடிக்கையை மறைமுகமாக முன்னெடுத்துள்ளது. என்றைக்கும் இல்லாமல் திடீரென தேசிய கொடியில் இஸ்லாத்தை அடையாளப்படுத்தும் பிறை நிலவு இல்லாமல் வெளியிடுவதும் மலாய்க்காரர்களின் RESERVE நிலங்கள் அபகரிக்கப்படுவதுமாகத் தொடர்ந்து டி.ஏ.பி தன் சுயரூபத்தைக் காட்டி வருகிறது என்றும் இஸ்லாத்தை எதிர்க்கும் டி.ஏ.பியின் இறுதி அத்தியாயம் Ayer Kuning சட்டமன்ற இடைத்தேர்தலில் மலாய்க்காரர்களால் எழுதப்பட வேண்டுமென கெடா மாநில மெந்திரி பெசாரும் பாஸ் கட்சியின் தேர்தல் நடவடிக்கைக் குழு தலைவருமான Dato’ Muhammad Sanusi Md Nor.
Dato’ Muhammad Sanusi Md Nor mengkritik DAP sebagai parti yang tidak diperlukan dan punca perpecahan kaum di Malaysia. Beliau mendakwa DAP menentang hak keistimewaan Islam dan Melayu serta menyeru pengundi menamatkan pengaruh DAP dalam PRK Ayer Kuning.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *