முதலீடு மோசடியில் RM 300,440 ரிங்கிட்டை இழந்த மருத்துவர்!

top-news

மே 9,

பதிவு செய்யப்படாத நிறுவனத்தில் முதலீடு செய்த மருத்துவர் ஒருவர் RM 300,440 ரிங்கிட்டை இழந்துள்ளதாக Timur Laut, மாவட்டக் காவல் ஆணையர் Abdul Rozak Muhammad தெரிவித்தார். கடந்த பிப்ரவரி 28 இரவு 7.49 மணிக்கு WHATSAPP மூலமாகக் கண்ட விளம்பரத்தை நம்பி 72 வயதான மருத்துவர் தனது சேமிப்புப் பணத்தை முதலீடு செய்து ஏமாற்றப்பட்டதாக வடகிழக்கு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

பாதிக்கப்பட்ட 72 வயது மருத்துவர் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நிறுவனத்தில் முதலீடு செய்வதாக நம்பி 11 வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு 17 முறை பணத்தைப் பரிவர்த்தனை செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏப்ரல் 17 வரையில் எந்தவொரு லாபத்தைப் பெறாததால் சந்தேகப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்ததும் சம்மந்தப்பட்ட நிறுவனம் போலி நிறுவனம் என கண்டறியப்பட்டுள்ளதாக Timur Laut, மாவட்டக் காவல் ஆணையர் Abdul Rozak Muhammad தெரிவித்தார்.

Seorang doktor warga emas berusia 72 tahun kerugian RM300,440 selepas melabur dalam syarikat tidak berdaftar yang dijanjikan pulangan tinggi. Mangsa membuat 17 transaksi ke 11 akaun berbeza sebelum menyedari dirinya ditipu.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *