கேபிள் திருட்டில் இருவர் கைது!

- Sangeetha K Loganathan
- 10 May, 2025
மே 10,
மலாக்காவில் உள்ள பல்வேறு பகுதிகளில் கேபிள் திருட்டில் ஈடுபட்ட 2 இளைஞர்களைக் காவல் துறையினர் கைது செய்துள்ளதாக மலாக்கா மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Dzulkhairi தெரிவித்தார். கைது செய்யப்பட்ட இருவரும் 25 வயது 29 வயது உள்ளூர் இளைஞர்கள் என்றும் தெலுக் இந்தானைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்றும் மலாக்கா மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Dzulkhairi தெரிவித்தார்.
சந்தேக நபர்கள் இருவரும் கேபிள் திருடி வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் Hilux வாகனத்தில் தப்பிக்கும் போது காவல்துறையினரால் சுமார் 100 கிலோ மீட்டர் வரையில் துரத்தி மடக்கி பிடிக்கப்பட்டதாக மலாக்கா மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Dzulkhairi தெரிவித்தார். கைது செய்யப்பட்ட 2 இளைஞர்களின் மீது போதைப்பொருள் கடத்தல், திருட்டு வழக்குகள், குண்டர் கும்பல் வழக்குகள் நிலுவையில் இருப்பதையும் காவல்துறையினர் அறிந்துள்ளதாக மலாக்கா மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Dzulkhairi தெரிவித்தார்.
Dua pemuda tempatan berusia 25 dan 29 tahun ditahan polis selepas dipercayai terlibat dalam kes kecurian kabel di Melaka. Mereka ditahan selepas dikejar sejauh 100km di lebuh raya, dan mempunyai rekod jenayah lampau termasuk dadah.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *