நியூஸிலாந்தில் கடும் மழை - புயல்! - மலேசியர்களுக்குப் பாதிப்பில்லை

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மே 3: நியூசிலாந்தை பாதித்துள்ள கடுமையான வானிலையால், குறிப்பாக Wellington மற்றும் Canterbury பகுதிகளில், மலேசியர்கள் யாரும் பாதிக்கப்பட்டதாகத் தகவல் இல்லை என்று வெளியுறவு அமைச்சு இன்று தெரிவித்துள்ளது.

விஸ்மா புத்ரா நிலைமையைக் கண்காணித்து வருவதாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மலேசியர்கள் விழிப்புடன் இருக்கவும், தகவல் தெரிவிக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மலேசியர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்காக வெலிங்டனில் உள்ள மலேசியத் தூதரக அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

உதவி தேவைப்படும் மலேசியர்கள் 10 வாஷிங்டன் அவென்யூ, புரூக்ளின், அஞ்சல் பெட்டி 9422, வெலிங்டனில் உள்ள மலேசிய தூதரகத்தையோ அல்லது +64-4-3852439 அல்லது +64-210440188 (அவசரநிலைகளுக்கு) என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம்.

வெலிங்டனில் பலத்த காற்று வீசியது. கடும் மழை மற்றும் புயல் காரணமாக பள்ளிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன. ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

மேற்பரப்பு வெள்ளம் மற்றும் சாலை மூடல்கள் காரணமாக கிறிஸ்ட் சர்ச் நகரம் மற்றும் செல்வின் பகுதியில் அவசரகால நிலை தொடர்ந்து அமலில் உள்ளது.

வெலிங்டன் சர்வதேச விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையிலும், விமானப் போக்குவரத்தில் இடையூறுகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது!

Kementerian Luar mengesahkan tiada rakyat Malaysia terjejas akibat cuaca buruk di New Zealand, khususnya di Wellington dan Canterbury. Wisma Putra sedang memantau situasi dan menasihatkan rakyat Malaysia di kawasan terjejas agar berwaspada dan hubungi kedutaan jika perlu.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *