இடைநிலைப்பள்ளி மாணவி நிஷாலினிக்கு அடையாள அட்டை கிடைத்தது!

- Muthu Kumar
- 24 Apr, 2025
(டிகே.மூர்த்தி)
ஆயர் தாவார், ஏப்.24-
நிஷாலினி நான்கு வயது குழந்தைப் பருவத்தின்போது பெற்றவர்களால் கைவிடப்பட்ட நிலையில், இங்குள்ள சனாதன தர்ம ஆசிரமத்தில் அதன் பொறுப்பாளர் ஏரம்பன் பார்வையில் நடத்தப்பட்டு வரும் ஆசிரமத்தில் எவ்வித அடையாள ஆவணமுமின்றி வளர்ந்து வந்துள்ளார்.
நிஷாலினி ஏழு வயதில், சித்தியவான் மகா கணேசா வித்தியாசாலை தமிழ்ப்பள்ளியில் முதலாம் ஆண்டு முதல் ஆறாம் ஆண்டுவரையில் தனது கல்வியைத் முடித்துள்ளார். அவருக்கு இப்போது 14 வயது என்னும் நிலையில் அவரால் இடைநிலைப்பள்ளிக்கான கல்வியைத் தொடர முடியாமல் போனார்.அதற்கு அடையாள ஆவணம் என்பது முக்கிய காரணமாக இருந்துள்ளது என்று பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினரின் இந்திய நலப் பிரிவுக்கு பொறுப்பேற்றுள்ள தினகரன் கோவிந்தசாமி தெரிவித்தார்.
இப்பிரச்சினை குறித்து ஏரம்பன் தன்னுடைய கவனத்திற்குக் கொண்டு வந்தார். நாடாளுமன்ற உறுப்பினர் ஙே கூ ஹாம் சார்பில் தாம் களத்தில் இறங்கியதாக அவர் குறிப்பிட்டார்.தொடக்கமாக நிஷாலினியின் தாயார் பஹாங் மாநிலத்தின் பெந்தோங்கில் இருப்பதை அறிந்து, ஆசிரமத்தின் ஏரம்பன் மற்றும் மாணவி நிஷாலினியுடன் தாமும் சென்று அடையாள ஆவணம் இல்லாததால் தொடர்ந்து கல்வி கற்க முடியாமல் இருக்கும் நிலை குறித்து அவருடைய தாயாருக்கு உணர்த்தப்பட்டது.
நிஷாலினிக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்கு அவரின் தாயார் முன்வந்துள்ளார். உள்துறை அமைச்சகத்திற்கு தேவையான தகவல்கள் அளிக்கப்பட்டன. சட்ட ரீதியாக நிஷாலினி பிறப்பு குறித்த அனைத்து உண்மையான ஆதாரங்களையும் அரசாங்க மருத்துவமனையின் வழி பெற்றுக்கொண்ட பிறகு மஞ்சோங்கில் உள்ள அடையாள ஆவணப்பதிவு அலுவலகத்தின் மூலம் நிஷாலினிக்கு முறையாக நாட்டின் குடிமகள் என்னும் அங்கீகாரத்துடன் அடையாள அட்டை கிடைக்கப் பெற்றது.
தற்போது அவர் இங்குள்ள தோக் பிரடானா இடைநிலைப்பள்ளியில் படிவம் இரண்டில் தனது படிப்பைத் தொடர்ந்துள்ளார். இப்பிரச்சினைக்கு பேருதவியாக இருந்துள்ள உள்துறை அமைச்சகத்திற்கும். செய்திகள் மூலம் ஆதரவாக இருந்துள்ள ஊடகங்களுக்கும், மஞ்சோங் இந்து சபாவுக்கும், நிஷாலினியின் அன்னைக்கும் பெருவாஸ் நாடாளுமன்றத்தின் சார்பில் தினகரன் தனது நன்றியினைப் பகிர்ந்தார்.
Nishalini, ditinggalkan sejak kecil, tidak memiliki dokumen pengenalan diri dan terpaksa berhenti sekolah. Dengan bantuan pelbagai pihak, termasuk ibunya dan Kementerian Dalam Negeri, beliau kini memperoleh MyKad dan kembali bersekolah di Tingkatan Dua.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *