முட்டை விலையை அதிகரித்தால் அமைச்சிடம் சொல்லுங்கள்!

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, மே 2: அரசாங்கம் ஒரு முட்டைக்கு ஐந்து காசுகள் மானியத்தைக் குறைத்திருந்தாலும், கோழி முட்டைகளின் கட்டுப்பாட்டு விலை தற்போது வரை மாறாமல் உள்ளது என்று உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவீன அமைச்சின் அமலாக்க இயக்குநர் டத்தோ அஸ்மான் ஆடம் கூறினார்.

வர்த்தகர்கள் இன்னும் தற்போதைய ஒழுங்குமுறை விலையில் முட்டைகளை விற்க வேண்டும் என்று அவர் கூறினார். இந்த மாற்றம் கிரேடு ஏ, பி மற்றும் சி முட்டைகளுக்கான மானிய கட்டமைப்பை மட்டுமே உள்ளடக்கியது என்று அவர் தெரிவித்தார்.

இந்த மூன்று மாத காலத்தில், முட்டை உற்பத்தியாளர்களுக்கு அரசாங்கத்தின் மானியமாக ஒரு முட்டைக்கு ஐந்து சென் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் கட்டுப்படுத்தப்பட்ட சில்லறை விலை அப்படியே உள்ளது என்று இன்று சுகாதார அமைச்சில் நடைபெற்ற கட்டாய மருந்து விலை காட்சிப்படுத்தல் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது அஸ்மான் இவ்வாறு கூறினார்.

 ஐந்து காசு மானியம் குறைக்கப்பட்டதால், எந்தவொரு தரப்பினரும் இப்போது முட்டை விலையை அதிகரித்தால், பொதுமக்கள் அமைச்சகத்திடம் தெரிவிக்கலாம்  என்று அவர் கூறினார்!

Walaupun kerajaan mengurangkan subsidi lima sen untuk setiap telur, harga kawalan telur kekal tidak berubah, kata Pengarah Penguatkuasaan Kementerian Perdagangan Dalam Negeri dan Hal Ehwal Pengguna, Datuk Asman Adam.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *