துணைத் தலைவர் பதவியை சைஃபுடினே ஏற்கட்டும்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மே 7-

கட்சியின் துணைத் தலைவர் பதவியை ஏற்க டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நகத்தியோனுக்கு வழிவிடுமாறு டத்தோ ஸ்ரீ ரஃபிஸி ரம்லியை, பிகேஆர் தொகுதித் தலைவர் ஒருவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.ரஃபிஸியின் ராஜினாமா மீதான ஆரூடங்களும் விடுமுறை நீட்டிப்புக் குறித்த அவரின் முடிவும், கட்சி உறுப்பினர்கள் மத்தியிலும் ஒற்றுமை அரசாங்கத்திற்குள்ளும் அசௌகரியத்தை ஏற்படுத்தி இருப்பதாக, தித்திவங்சா பிகேஆர் தொகுதித் தலைவர் சைட் பட்லி ஷா ஒஸ்மான் கூறியுள்ளார்.

கட்சியின் நிலைத்தன்மையைப் பாதிக்கச் செய்யும் அளவுக்கு நிலைமையை இட்டுச்
செல்வதற்கு பதிலாக, அத்தகைய ஆரூடங்களுக்கு ரஃபிஸி முற்றுப் புள்ளியை வைத்திருக்க வேண்டும் என்று, நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் சைட் பட்லி தெரிவித்தார்.

அரசாங்கம் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை வலிமைப்படுத்துவது மீது பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கவனம் செலுத்தி வரும் வேளையில், இந்த விவகாரத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கும் பொறுப்பை, பிகேஆர் கட்சித் தலைவருமான அன்வாரிடம் ரஃபிஸி விட்டிருக்கக் கூடாது.

“எனினும், இந்த ஆரூடங்கள் உண்மையென்றால், இம்மாதம் நடைபெற விருக்கும் கட்சியின் மத்திய தலைமைத்துவத்
தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கு சைஃபுடின் போட்டியின்றி தேர்வு செய்ய அனுமதிப்பதன் மூலம், ஒரு சுமுகமான முறையில் கட்சியின் துணைத் தலைவர் பதவியை சைஃபுடினிடம் ஒப்படைத்து சமரசம் காண வேண்டும் என்று ரஃபிஸிக்கு பரிந்துரைக்க நான் விரும்புகிறேன் என்று சைட் பட்லி குறிப்பிட்டார்.

மூத்த மற்றும் அனுபவம் வாய்ந்த ஒரு தலைவரான சைஃபுடின், அன்வாருடன் சேர்ந்து பணியாற்றத் தகுதி வாய்ந்தவராகவும் இருப்பதாக அவர் தெரிவித்தார்.மொத்தம் 16,668 வாக்குகள் பெரும்பான்மையில் சைஃபுடினை தோற்கடித்த பின்னர், 2022ஆம் ஆண்டில் பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் பதவிக்குத் தேர்வாகி இருந்த ரஃபிஸி, அப்பதவியை தற்காத்துக் கொள்ளப் போட்டியிட விருப்பதாக கடந்த மார்ச் மாதத்தில்
அறிவித்திருந்தார்.

எனினும், கட்சியின் தொகுதித் தேர்தல்களில் தமக்கு நெருக்கமான பல மூத்த தலைவர்கள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ரஃபிஸி தமது பொருளாதாரத் துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக கடந்த வாரத்தில் வதந்திகள் பரவின.ஆனால் அது உண்மையல்ல என்று கூறி, அன்வார் அதற்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார். இந்நிலையில், கட்சித்தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதா இல்லையா என்பது குறித்த தமது முடிவை தாம் இறுதி நேரத்தில் அறிவிக்கப் போவதாக, பக்காத்தான்
ஹராப்பான் தலைமைச் செயலாளருமான சைஃபுடின் கடந்த ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தார்.

தற்போதைக்கு இது குறித்து ரஃபிஸி ரம்லியுடன் தாம் கலந்து பேசியிருப்பதாகவும் கட்சித் தலைவர் அன்வாரை சந்தித்திருப்பதாகவும் சைஃபுடின் கூறியிருந்தார்.2025ஆம் ஆண்டு பிகேஆர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலுக்கான நாள் நாளைய தினம் 8 மற்றும் மறுநாள் 9 ஆகிய தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டு இருப்பதால், போட்டி குறித்த முடிவை அறிவிக்க தமக்கு இன்னமும் நேரம் இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.

Seorang pemimpin cabang PKR menggesa Rafizi Ramli agar berundur daripada jawatan timbalan presiden dan memberi laluan kepada Saifuddin Nasution susulan isu cuti dan spekulasi peletakan jawatan yang mengganggu kestabilan parti serta kerajaan perpaduan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *