அமைதியைக் குழிபறிக்கும் மதவெறி குறித்து பேசுவோம்! - அன்வார்

- Shan Siva
- 25 May, 2024
சமூக நல்லிணக்கத்தைப்
பேணி பாதுகாப்பது, பிற
மதத்தினரிடம் பச்சாதாபம் காட்டுவது இஸ்லாமியர்களின் கடமை என்று பிரதமர் டத்தோஸ்ரீ
அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார். ஜப்பானில் உள்ள கியோ
பல்கலைக்கழகத்தில் பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
முஸ்லிம்கள் மற்ற
மதங்களைப் புரிந்துகொள்வதும், இரக்கம் காட்டுவதும் எவ்வளவு இன்றியமையாததோ, அதேபோன்று பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள், இந்துக்கள் மற்றும் பிற மதத்தினரும்
இஸ்லாத்தின் மீது அதே பச்சாதாபத்தைக் கொண்டிருக்க வேண்டியது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.
இஸ்லாமிய ஆய்வுகள்
மற்றும் ஒப்பீட்டு மதத்தில் நிபுணத்துவம் பெற்ற ஜப்பானிய அறிஞரான டோஷிஹிகோ
இசுட்சுவை கௌரவிக்கும் விழாவில் தமது உரையில் அன்வார் இதனைத் தெரிவித்தார். டோஷிஹிகோ
இசுட்சு ஜப்பானிய மொழியில் குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பாளராக அறியப்படுகிறார்.
சமூகங்களைப்
பிளவுபடுத்தும் மற்றும் அமைதியைக் குழிபறிக்க நினைக்கும் மதவெறியை எதிர்ப்பதற்கு
பல்வேறு மதங்கள் மற்றும் பின்னணியில் உள்ள மக்களிடையே மேலும் வெளிப்படையான
உரையாடலுக்கு அவர் அழைப்பு விடுத்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *