பள்ளிவாசலில் பாலியல் தாக்குதல்-ஆடவனுக்கு மனநலப் பரிசோதனை!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஏப். 30-

பள்ளிவாசலொன்றில் பத்து வயது சிறுமி மீது பாலியல் தாக்குதல் நடத்திய பதின்ம வயது இளைஞனை மனநலப் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கும்படி நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.அடாம் ஹைகால் அப்துல்லா எனும் அந்நபர், பத்தாங் காலியில் உள்ள அப்பள்ளிவாசலில் கடந்த பிப்ரவரி மாதம் அச்செயலில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது.

குற்றவியல் சட்டம் 342(1) ஆவது பிரிவின்கீழ் தமது கட்சிக்காரர் அடாமுக்கு மனநலப் பரிசோதனை நடத்த அனுமதிக்கும்படி அவரின் தற்காப்பு வழக்கறிஞர் லிங்கேஸ்வரன் சிங் இதற்கு முன்னர் அம்பாங், செஷன்ஸ் நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தார்.பத்தொன்பது வயதான அடாம், மனநலப் பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார் என்பதால் அவரிடம் விசாரணை நடத்துவது சரியாக இருக்காது என்று லிங்கேஸ்ரன் சொன்னார்.

அதனைத் தொடர்ந்து, பேராக், உலு கிந்தா மருத்துவமனைக்கு அவனை மனநலப் பரிசோதனைக்கு அனுப்பும்படி நீதிபதி உத்தரவிட்டார்.சிசிடிவி பதிவுக்காட்சி தொடர்பான அறிக்கை, செலாயாங் மருத்துவமனையின் மருத்துவ அறிக்கை ஆகியவற்றைத் தவிர்த்து வழக்குத் தொடர்பான இதர அனைத்து ஆவணங்களும் தற்காப்புத் தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டன என்று பஸதுணை அரசு வழக்கறிஞர் நாடியா மாலேக் ஃபவுசி தெரிவித்தார். இவ்வழக்கின் அடுத்த மேலாண்மை ஜூலை 22ஆம் தேதியன்று நடத்துவதற்கு நீதிபதி நோர்ஷிலா கமாருடின் தேதி நிர்ணயித்தார்.

பிப்ரவரி 12ஆம் தேதி காலை 6.20மணிக்கு அப்பள்ளிவாசலில் பத்து வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக அதே மாதம் 27ஆம் தியன்று அடாம் மீது குற்றம் சுமத்தப்பட்டது. அக்குற்றச்சாட்டை முதலில் அவன் ஒப்புக் கொண்டான். ஆனால், பின்னர் அதனை மறுத்து விசாரணை கோரினான்.அடாமுக்கு ஜாமீன் தொகை வழங்க பெற்றோர்களால் இயலாததால் புஞ்சாக் அலாம் சீர்திருத்த காவல் மையத்தில் அவன் தடுத்து வைக்கப்பட்டிருந்தான்.

Mahkamah mengarahkan lelaki berusia 19 tahun, Adam Haikal Abdullah, dihantar untuk pemeriksaan mental selepas didakwa melakukan serangan seksual terhadap seorang kanak-kanak berusia 10 tahun di sebuah rumah anak yatim di Pahang. Kes tersebut akan disambung pada 22 Julai.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *