உதவித்தொகை குறைக்கப்பட்டாலும் முட்டை விலைகள் சீராக உள்ளன!

- Muthu Kumar
- 02 May, 2025
கோலாலம்பூர், மே 2-
முட்டைகளுக்கான உதவித் தொகையை அரசாங்கம் பாதியாக குறைத்திருந்தாலும் கோழி முட்டைகளுக்கான சில்லறை விலைகள் இன்னும் சீரான நிலையிலேயே உள்ளன என்பதை ஆய்வுகள் காட்டுகின்றன.
ஒரு முட்டைக்கான உதவித் தொகை ஐந்து காசாக குறைக்கும் திட்டம் நேற்று முதல் நடப்புக்கு வந்தது. ஆகஸ்டு முதல் தேதியன்று உதவித்தொகையை முற்றாக அகற்ற அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
புதிய உதவித்தொகை ஐந்து காசாக இருந்தாலும், பல மாநிலங்களில் முட்டை
விலைகள் ஏற்றம் காணாமல் சீராகவே இருந்து வருகிறது என்று தேசிய செய்தி நிறுவனமான பெர்னாமா நேற்று நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது.
வழக்கம்போல் ஒரு தட்டு கிரேட் ஏ முட்டைகள் 12.30வெள்ளிக்கும் கிரேட் பி முட்டைகள் 9.30மணிக்கும் கிரேட் சிமுட்டைகள் 9 9 முட்டைகள் 8.10 வெள்ளிக்கும் நேற்று விம்பூர் மாநகர என்றும் வர்த்தகரான லீ சுன் சியான் என்பவர் தெரிவித்தார்.முட்டை விநியோகம் சீராக இருக்கும் பட்சத்தில், உதவித்தொகை இல்லாதிருந்தாலும்கூட முட்டை விலைகள் அதிகம் ஏற்றம் காணாது என்று அவர் தெரிவித்தார்.
முட்டைகளுக்கான புதிய விலைப் பட்டியல் இப்போதுதான் எங்களுக்கு கிடைத்துள்ளது. விலையில் மாற்றம் செய்யப்பட வேண்டுமா என்பது அடுத்த வாரம்தான் முடிவாகும். விலையை அதிகமாக ஏற்றினால் வாடிக்கையாளர்கள் புகார் கூறுவார்கள் என்று மற்றொரு வர்த்தகரான வோங் (வயது 75) என்பவர் கூறினார்.
Kerajaan mengurangkan subsidi telur sebanyak lima sen mulai semalam dan akan menghapuskan subsidi sepenuhnya pada bulan Ogos. Walaupun subsidi dikurangkan, harga telur kekal stabil di banyak negeri, menurut kajian Bernama.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *