ஆசிரியர்களுக்கு நிம்மதி! இனி e-RPH அச்சிட வேண்டியதில்லை! கல்வி அமைச்சு!

- Sangeetha K Loganathan
- 01 May, 2025
மே 1,
ஆசிரியர்களின் அன்றாடக் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளைக் கல்வி அமைச்சுக்கு அனுப்பும் முறைகள் எளிமையாக்கப்பட்டிருக்கும் நிலையில் மேலும் கல்வி அமைச்சுக்கு அனுப்பிய RPH தகவல்களை அச்சிட வேண்டாம் என கல்வி அமைச்சின் தலைமை இயக்குநர் Datuk Azman Adnan இன்று தெரிவித்தார். அன்றாடக் கற்றல் கற்பித்தலை இயங்கலையின் மூலமாகக் கல்வி அமைச்சுக்கு அனுப்பினால் மட்டும் போதுமென்றும் தனியாக அதனை அச்சிட வேண்டிய அவசியம் இல்லை என அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக முடிவெடுக்கும் முன்னர் பலதரப்பட்ட ஆசிரியர்களுடன் கலந்தாலோசித்ததாகவும் பரிசீலனைக்குப் பின்னர் இந்த நடைமுறையால் எந்தவொரு பயனுமில்லை என்பதை உணர்ந்து கல்வி அமைச்சு இந்த அறிவிப்பை வெளியிடுவதாகவும் இதனால் ஆசிரியர்களுக்கு இரட்டை பணிகளுக்கானச் சுமைகள் குறைக்கப்படுவதாகவும் Datuk Azman Adnan தெரிவித்தார். ஆசிரியர்கள் நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் கல்வி அமைச்சின் செயல்பாடுகளுக்கு ஆசிரியர்கள் ஒத்துழைப்பு வழங்கியிருப்பதைக் கல்வி அமைச்சு உணர்ந்திருப்பதாகவும் Datuk Azman Adnan தெரிவித்தார்.
Kementerian Pendidikan mengumumkan guru tidak lagi perlu mencetak RPH (Rancangan Pengajaran Harian) yang dihantar secara digital. Langkah ini bertujuan mengurangkan beban tugas guru dan diambil selepas perbincangan bersama warga pendidik.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *