இந்தியர் அமைச்சராக இருப்பதை Barisan விரும்பவில்லை! - HAMZAH

- Sangeetha K Loganathan
- 30 Apr, 2025
ஏப்ரல் 30,
மலேசியாவில் தமிழ்ப்பேசும் இந்திய அமைச்சர் ஒருவர் இல்லாமல் போனதற்குக் காரணம் BARISAN NASIONAL தான் என எதிர்கட்சி தலைவர் HAMZA ZAINUDIN தெரிவித்தார். அமைச்சர்கள் எப்போதும் ஒரு கட்சியின் தலைமையால் முன்மொழியப்படுவார்கள். ஆனால் பாரிசான் இப்போது அல்ல கடந்த ஆட்சியிலும் அமைச்சரவை பட்டியலில் இந்தியரின் பெயரைப் பாரிசான் வழங்கவில்லை என HAMZAH தெரிவித்தார்.
2021 மகாதீர் அமைச்சரவையைக் கலைத்ததும் MUHYIDDIN YASSIN தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்ட நிலையில் அப்போது பாரிசானும் பெரிக்காதானும் இணைந்து அமைச்சரவையை உருவாக்கினர். அப்போது பெரிக்காத்தானில் இந்தியர்கள் இல்லாததால் அமைச்சரவையில் இந்தியர்களைப் பிரதிநிதிப்பது எனும் கேள்விக்குப் பாரிசானின் அமைச்சரவை பட்டியலில் இந்தியரின் பெயர் இல்லை என்றும் இந்தியர் அமைச்சரையில் இருப்பதைப் பாரிசான் விரும்பவில்லை என்றும் HAMZAH தெரிவித்தார். அமைச்சரவை என்பது அமைச்சு தொடர்பான விவகாரங்களுங்கு மட்டுமல்ல அது சமூகத்தின் குரலாகவும் அமைச்சரவையில் ஒலிக்கும் என்பதை HAMZAH வலியுறுத்தினார்.
Ketua Pembangkang Hamzah Zainudin mendakwa ketiadaan menteri berbangsa India dalam kabinet berpunca daripada Barisan Nasional (BN). Katanya, BN tidak pernah mencadangkan calon India dalam senarai menteri, termasuk semasa pentadbiran Muhyiddin Yassin.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *