திறமை இருந்தால் நிர்வாகத்தை நடத்துங்கள்! கடுப்பான Hannah Yeoh!

top-news

மே 6,

மலேசியாவில் இயங்கி வரும் கால்பந்து அணிகள் அதன் மோசமான நிர்வாகத்தால் நிதி நெருக்கடிகளை எதிர்நோக்குவதாக இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் Hannah Yeoh தெரிவித்தார். மலேசியாவில் அதிகமானக் கால்பந்து ரசிகர்கள் கொண்டிருந்தாலும் கால்பந்து அணிகளை நடத்தும் நிர்வாகத்தின் மெத்தனத்தால் சம்மந்தப்பட்ட கால்பந்து அணியில் விளையாட்டாளர்கள் பாதிக்கபடுவதாக Hannah Yeoh வருத்தம் தெரிவித்தார்.

நிர்வாகத் திறன் இல்லாத மேலாளர்களால் முதலீடுகளை ஈர்க்க முடியாமல் விளையாட்டு வீரர்களின் ஊதியமும் அவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுவதாக Hannah Yeoh தெரிவித்தார். உள்நாட்டுக் கால்பந்து அணிகளில் இத்தகைய மோசமான நிர்வாகத்தால் பல விளையாட்டாளர்கள் விளையாட்டுத் துறையிலிருந்து வெளியேறுவதாகவும் அதனால் தேசிய கால்பந்து அணி திறமையானக் கால்பந்து வீரர்களை அடையாளம் காணுவதில் சிக்கலை எதிர்நோக்குவதாகவும் Hannah Yeoh குறிப்பிட்டார்.

Menteri Belia dan Sukan, Hannah Yeoh, mengkritik pengurusan lemah pasukan bola sepak tempatan yang menyebabkan masalah kewangan, gaji tertunggak dan kehilangan bakat. Beliau menegaskan bahawa hanya mereka yang berkebolehan harus mengurus pasukan bagi menjamin masa depan sukan bola sepak.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *