மிம்தாவின் கோரிக்கையை அரசு பரிசீலிக்கிறது!

- Tamil Malar (Reporter)
- 08 May, 2025
(எம்.முருகன்)
கோலாலம்பூர் மே 8: அந்நியத்
தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ள மிம்தா எனப்படும் மலேசிய இந்தியர் உலோகப்
பொருள் மறுசுழற்சி சங்கத்தின் 15 ஆண்டுகால
போராட்டத்திற்கு பலன் கிடைத்துள்ளது என்று மிம்தா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ தீபா
ஆறுமுகம் தெரிவித்தார்.
மிக விரைவில்
நல்ல பதில் கிடைக்கும் என்று தாங்கள் நம்புவதாக அவர் கூறினார்.
இந்த தருணத்தில்
மடானி அரசாங்கத்தின் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் மற்றும்
மனிதவள அமைச்சர் ஸ்டீபன் சீம் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக
டத்தோஸ்ரீ தீபா ஆறுமுகம் தெரிவித்தார்.
உலோகப் பொருள் மறுசுழற்சி துறையில் வேலை செய்ய அந்நியத் தொழிலாளர்கள் உடனடியாக தேவைப்படுகிறார்கள் என்ற மிம்தாவின் கோரிக்கையை மடானி அரசாங்கம் பரிசீலித்து வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்!
MIMTA menghargai kerajaan Madani atas pertimbangan membawa pekerja asing ke sektor kitar semula logam. Presiden MIMTA, Datuk Seri Deepa Arumugam, berkata perjuangan 15 tahun mereka akhirnya menunjukkan hasil. Terima kasih diucapkan kepada Perdana Menteri dan menteri berkaitan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *