இ.டேப் தொகையை உயர்த்தும் விவகாரம் ஜூன் மாதத்திற்குள் இறுதி செய்யப்படும்!

- Muthu Kumar
- 27 Apr, 2025
கோத்தா பாரு, ஏப். 27-
சுகாதாரப் பணியாளர்களுக்கான இ.டேப் எனப்படும் குறுகிய அழைப்பு அலவன்ஸ் தொகையை உயர்த்துவது தொடர்பான விவகாரம், ஜூன் மாதத்திற்குள் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னாள் சுகாதார தலைமை இயக்குநர், டான்ஸ்ரீ டாக்டர் அபு பகார் சுலைமான் தலைமையிலான செயற்குழு இறுதி முடிவை எடுப்பதற்கு முன், தற்போது இறுதிக் கட்ட விவாதத்தில் உள்ளதாக சுகாதார அமைச்சர், டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கிஃப்லி அஹ்மாட் தெரிவித்தார்.“எனக்குத் தெரியும், இவ்விவகாரம் அதிக நாட்களாக காத்திருந்த ஒன்று. இம்முறை அனைத்தும் முழுமையாக தீர்க்கப்படும் என்று நான் நினைக்கிறேன்.
ஆக, தாமதமாக ஜூன் மாதம். ஆனால், முடிந்தால் மே மாதத்தில் இப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்று நான் தனிப்பட்ட முறையில் விரும்புகிறேன். ஏனென்றால் அவர்கள் மிகவும் கடினமாக உழைக்கிறார்கள். நாமும் இறுதி கட்டத்திற்கு வந்து விட்டோம் என்பதையும் நான் அறிவேன்",என்று அவர் கூறினார்.
நேற்று, கோத்தா பாருவில், 2025ஆம் ஆண்டு கிளந்தான் மாநில மடானி அஃபியாட் திட்டத்தைத் தொடக்கி வைத்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் சுல்கிஃப்லி அவ்வாறு கூறினார்.சுகாதார அமைச்சை தாம் வழிநடத்த தொடங்கியதில் இருந்து, அமைச்சின் பணியாளர்களின் நலனே தமக்கு என்றுமே முன்னுரிமையாக இருந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Menteri Kesihatan, Datuk Seri Dr. Dzulkefly Ahmad, menjangka isu kenaikan Elaun Panggilan Pendek (ETAP) untuk petugas kesihatan akan dimuktamadkan selewat-lewatnya Jun ini. Beliau menegaskan keutamaannya terhadap kebajikan kakitangan kesihatan dan berharap penyelesaian dicapai lebih awal, pada Mei.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *