ஆறு மாதங்களுக்குத் தேவையான அரிசி கையிருப்பில் உள்ளது!

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, மே 9-

மலேசியாவின் தற்போதைய அரிசி கையிருப்பு இரண்டு லட்சம் மெட்ரிக் டன்னாக உள்ளது. இது ஆறரைமாத உள்நாட்டுத் தேவைக்குப் போதுமானதாகும் என்று விவசாய மற்றும் உணவுப் பாதுகாப்புத்துறை துணையமைச்சர் டத்தோ ஆர்தர் ஜோசப் குரூப் தெரிவித்தார்.

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்ற நிலை அதிகரித்து வரும் வேளையில், நாட்டின் அரிசி கையிருப்பு பாதிக்குமா என்று வினவப்பட்டதற்கு ஆர்தர் அவ்வாறு குறிப்பிட்டார். பாகிஸ்தானிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் மலேசியா கணிசமான அளவுக்கு அரிசியை இறக்குமதி செய்து வருகிறது.

உலகின் மிகப் பெரிய அரிசி உற்பத்தி நாடாக இந்தியா விளங்கி வருகிறது. இந்தியா பதினான்கு கோடியே ஐம்பத்திரண்டு லட்சம் டன் அரிசியை உற்பத்தி செய்கிறது. ஒரு கோடி மெட்ரிக் டன் அரிசியை உற்பத்தி செய்யும் பாகிஸ்தான் பத்தாவது இடத்தில் உள்ளது.

Malaysia memiliki stok beras sebanyak 200,000 metrik tan, mencukupi untuk keperluan domestik selama enam bulan. Timbalan Menteri Pertanian menyatakan ketegangan India-Pakistan tidak menjejaskan bekalan, walaupun Malaysia mengimport beras dari kedua-dua negara tersebut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *