விஜய் போல எனக்கும் துணை முதல்வர் பதவி தருவதாக சொன்னாங்க - சீமான்!

- Muthu Kumar
- 20 Apr, 2025
பா ஜகவுடன் கூட்டணி இல்லை என எடப்பாடி பழனிசாமி தொடர்ச்சியாக கூறி வந்த நிலையில், திடீரென கூட்டணி வைத்தது விவாதங்களை ஏற்படுத்தியது.இதனிடையே ஆடிட்டரும், துக்ளக் ஆசிரியருமான குருமூர்த்தி அளித்த பேட்டியில், அதிமுகவின் முதல் சாய்ஸ் விஜய்யாகவே இருந்தது. ஆனால் விஜய் 90 சட்டமன்றத் தொகுதிகள், துணை முதல்வர் பதவி கேட்டார். அப்படி அளித்திருந்தால் அது எடப்பாடி பழனிசாமிக்கு பாதகமாக போயிருக்கும், அமித்ஷாவின் திறமையால் அதிமுக - பாஜக கூட்டணி அமைந்தது என்று கருத்து தெரிவித்தார்.
இதுதொடர்பாக நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு, "அது நடந்திருக்கலாம். துணை முதல்வர் பதவி தர முடியாது என்றெல்லாம் சொல்லியிருக்க மாட்டார்கள். என்னிடம் பேசப்பட்டது எல்லாம்தான் அங்கும் பேசப்பட்டுள்ளது. துணை முதல்வர் பதவியை மறுத்திருக்க மாட்டார்கள். பேச்சுவார்த்தை ஒத்து வந்திருக்காது, பிரிந்துவிட்டனர்" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, "2006ஆம் ஆண்டு போல யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத போது எங்களின் முடிவை அறிவிப்போம். நாம் தமிழர் கட்சி ஆட்சி மாற்றத்திற்காக வரவில்லை. அடிப்படையையே மாற்றுவதற்காக வருகிறோம். மத்தியில் ஆட்சியில் இருந்த கட்சிகளுடன் கூட்டணி வைத்துவிட்டு, மாநில தன்னாட்சி பேசுவதை எப்படி ஏற்க முடியும்? இந்தி மொழியை திணித்தது காங்கிரஸ், எதிர்த்தது தமிழ்நாடு. இந்தி மொழியை திணித்தவர்களுடன் கூட்டணி வைத்தது திராவிடக் கட்சிகள்.
டெல்லிக்கு அவுட் ஆஃப் கண்ட்ரோலில் தமிழகம் இருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சொல்கிறார். பேரிடர் நிதியை தரவில்லை, கல்வி நிதியை தரவில்லை.இப்படிப்பட்ட சூழலில் மத்திய அரசுக்கு வரி தரமாட்டோம் என்று ஸ்டாலின் சொல்லி இருந்தால் தமிழ்நாடு அவுட் ஆஃப் கண்ட்ரோலில் இருப்பதாக அர்த்தம். இப்போது அண்டர் தி கண்ட்ரோல் என்பதுதான் சரியானது" என்று விமர்சனம் செய்தார். மேலும், நாம் தமிழர் கட்சி சட்டமன்றத் தேர்தலில் தனித்துதான் போட்டியிடும் என்றும் சீமான் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *