ஜொகூரில் HFMD எனும் அரிய வகை நோயல் 1,441 பேர் பாதிப்பு!

top-news

ஏப்ரல் 29,

அரிய வகை நோயான HFMD எனும் தொற்றால் ஜொகூர் மாநிலத்தில் 1,441 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜொகூர் மாநிலச் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கை கால் வாய் பகுதிகளில் புண்கள் ஏற்பட்டு அது அம்மை தொற்றுப் போல பரவும்படியான இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டு தனித்து வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகமாகச் சோர்வை ஏற்படுத்துவது மட்டுமல்லாது சுத்தமற்ற நிலையில் இருப்பதாலும் இந்த தொற்று பரவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜொகூர் மாநிலச் சுகாதாரத் துறையின் கணக்கின்படி ஜொகூர் பாருவில் 386 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பத்து பஹாட் பகுதியில் 254 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குளுவாங்கில் 192 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கோத்தா திங்கியில் 140 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தங்காக்கில் 134 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மூவாரில் 128 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பொன்தியானில் 94 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் செகாமாட்டில் 47 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மெர்சிங்கில் 37 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூலாயில் 29 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

Sebanyak 1,441 kes jangkitan penyakit HFMD dilaporkan di Johor, dengan kawasan paling terjejas termasuk Johor Bahru, Batu Pahat dan Kluang. Pesakit diberi rawatan dan diasingkan, manakala kebersihan dikenal pasti sebagai faktor penyebaran utama penyakit ini.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *