சீனப் பிரதமர் லீ ஜியாங் இம்மாத பிற்பகுதியில் மலேசியாவுக்கு வருகை!

top-news
FREE WEBSITE AD

பெய்ஜிங், மே 9-

புதிதாக அமைக்கப்பட்டுள்ள தென்கிழக்காசிய மற்றும் அரபு நாடுகள் அமைப்பின் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சீனப் பிரதமர் லீ ஜியாங் இம்மாத பிற்பகுதியில் மலேசியாவுக்கு வருகை மேற்கொள்கிறார். அமெரிக்காவின் வரிவிதிப்பைச் சமாளிக்கும் முயற்சியில் இந்நாடுகளின் ஆதரவைத் திரட்ட அவர் இம்மாநாட்டுக்கு வருவதாகக் கூறப்படுகிறது.

ஏப்ரல் 2 ஆம் தேதியன்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பல நாடுகளுக்கு இறக்குமதி வரி விதித்தார். ஆயினும், அதன் அமலாக்கத்தை மூன்று மாதங்களுக்கு ஒத்தி வைத்துள்ளார்.ஆனால், சீனாவுக்கு பெரிய அளவில் வரி விதிப்பை அறிவித்த அவர், அது உடனடியாக நடப்புக்கு வருவதாக அறிவித்தார்.

அமெரிக்காவின் இந்த அதிரடி அறிவிப்பைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், கொரியா போன்றவற்றுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொள்ள சீனா மும்முரமாக முயற்சி மேற்கொண்டு வருகிறது.
ஆசியான் உச்சநிலை மாநாடு மே மாதம் 26ஆம் தேதி நடைபெறுகிறது. அதற்கு மறுநாள் மே 27ஆம் தேதியன்று ஆசியான்-வளைகுடா ஒத்துழைப்பு மன்றம் சீனா உச்சநிலை மாநாடு நடைபெறுகிறது.

மே 27ஆம் தேதி நடைபெறும் மாநாட்டில் லீ ஜியாங் கலந்து கொள்வார் என்று ராய்ட்டர் செய்தி நிறுவனம் நேற்று தெரிவித்தது. ஆனால், அம்மாநாட்டுக்கு யாரை அனுப்புவது என்பதை சீனா இன்னும் உறுதிப்படுத்தவில்லை. ஆறு அரபு நாடுகளை உள்ளடக்கியிருக்கும் வளைகுடா ஒத்துழைப்பு மன்றத்தில் எண்ணெய் வளமிக்க சவூதி அரேபியா, குவைத், கத்தார் போன்ற நாடுகளும் இடம்பெற்றுள்ளன.

ஆசியான் அமைப்பு சீனாவின் மிகப் பெரிய வர்த்தகப் பங்காளியாக விளங்குகிறது.இவ்வாண்டின் முதல் காலாண்டில் அவற்றின் மொத்த வர்த்தக அளவு 23,400 கோடி டாலராகும்.அதே வேளையில், வளைகுடா ஒத்துழைப்பு மன்றத்தின் மிகப் பெரிய வர்த்தகப் பங்காளி சீனா ஆகும். கடந்த 2023ஆம் ஆண்டில், சீனாவுடன் ஒத்துழைப்பு மன்றத்தின் மொத்த மூலப்பொருள் வர்த்தகம் 29,800 கோடி டாலராக பதிவாகியிருந்தது.

Perdana Menteri China, Li Qiang dijangka melawat Malaysia hujung Mei ini untuk menghadiri Sidang Kemuncak ASEAN- Timur. Lawatan ini bertujuan meraih sokongan menghadapi tarif Amerika. ASEAN dan negara Timur merupakan rakan dagang utama China.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *