சபா கட்சிகள் அடிபணிய வேண்டுமா? நான் அப்படிச் சொல்லவில்லை!

- Muthu Kumar
- 05 May, 2025
கோலாலம்பூர், மே 5-
நாட்டின் நிலைத்தன்மையின் நலன்களுக்காக, சபா மாநில அரசியல் கட்சிகள், மத்திய அரசியல் கட்சிகளுக்கு அடிபணிய வேண்டும் என்று தாம் கோரிக்கை விடுத்திருப்பதாகக் கூறப்பட்டு வரும் குற்றச்சாட்டுகளை அம்மாநில அம்னோ மூத்த தலைவர் சாலே சைட் கெருவாக் மறுத்துள்ளார்.
சரவாக் மாநிலத்தின் சுயாட்சி குறித்த தமது அண்மைய கருத்துகளில் சபா மக்களை அவமதித்ததாகக் சுமத்தப்பட்டு வரும் அத்தகைய குற்றச்சாட்டுகளை, சபா மாநில முன்னாள் முதலமைச்சருமான சாலே மறுத்திருக்கின்றார்.தம் மீதான அத்தகைய குற்றச்சாட்டுகள் நியாயமற்றவை என்றும் சபா மற்றும் மத்திய அரசாங்கங்களுக்கு இடையிலான 'நேர்மையான மற்றும் நியாயமான" ஒத்துழைப்பு ஏற்படுத்தப்பட்டதன் மூலமே நிலைத்தன்மை உருவானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
"சரவாக் தனது சொந்தஅரசியல் நடைமுறையைக் கொண்டிருக்கிறது. சபாவும் அப்படித்தான்"என்று கூறிய சாலே, "சபாவில் நிலவும் அரசியல் சூழல் மற்றும் அரசியல் யதார்த்தங்களின் அடிப்படையில், பொருத்தமான அணுகுமுறையை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். எந்தக் கட்சியையும் கண்மூடித்தனமாகப் பின்பற்றவோ அல்லது முற்றிலுமாக நிராகரிக்கவோ கூடாது" என்றார்.
சரவாக் மாநில சுயாட்சி அரசியல் நடைமுறையை சபாவினால் பின்பற்ற முடியவில்லை என்ற அண்மையில் சாலே தெரிவித்திருந்தார்.அது குறித்து கருத்துரைத்துள்ள ஓர் அரசு சாரா அமைப்பின் தலைவர், மத்திய அரசியல் கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்ததன் பயனாகத்தான், மாநிலத்தில் நிலைத்தன்மை உருவாகி இருப்பதாக கூறியிருப்பதன் மூலம் சபா மக்களை சாலே அவமதித்துள்ளார் என்று கூறியிருப்பதாக, டெய்லி எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனம் நேற்று முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தது.
சரவாக் மாநில அரசியலில் பின்பற்றப்பட்டு வரும், மாநிலக் கட்சிகளுக்கு மட்டுமே அனுமதி மற்றும் தேசிய அளவிலான கட்சிகளுக்கு இடமில்லை என்ற கொள்கையை சபாவினால் பின்பற்ற முடியாது என்று, உசுக்கான் சட்டமன்ற உறுப்பினருமான சாலே கடந்த திங்கள்கிழமை கூறியிருந்தார்.
Salah seorang pemimpin UMNO Sabah, Salleh Said Keruak menafikan dakwaan menghina rakyat Sabah dan menegaskan kerjasama adil antara kerajaan negeri dan pusat penting untuk kestabilan. Beliau menyeru pendekatan politik realistik berasaskan situasi semasa.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *