மூன்று வாகனங்கள் மோதி விபத்து- இளைஞர் உயிரிழப்பு!

top-news
FREE WEBSITE AD

(கோகி கருணாநிதி)

குளுவாங்,மே 5-

குளுவாஙகில் டெக் வாஹ் ஹெங் சாலையில் மூன்று வாகனங்கள் தொடர்பாக ஏற்பட்ட கோர விபத்தில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநராக இருந்த இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த விபத்து மே 3ஆம் தேதி மாலை 6.45 மணியளவில் கிலோமீட்டர் 32, குளுவாங் -டெக் வாஹ் ஹெங் சாலையில் நிகழ்ந்தது. இவ்விபத்தில் இரண்டு கார்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் சம்பந்தப்பட்டிருந்தன. சம்பவம் தொடர்பாக மாலை 7.07 மணிக்கு போலீசாரிடம் முதல்நிலை புகார் பதிவு செய்யப்பட்டது.

முதல் வாகனமாக இருந்த மாஸ்டா கார் ஓட்டுநர் 32 வயதான மொஹ்ட் நபிஹ் சபியுல்லா பின் அப்துல் ரஹிம் என்பவர் பழங்கலைத்துறை தொழிலாளி. இரண்டாவது வாகனமாக இருந்த டொயோட்டா அவான்சா காரை 55 வயதான லியூ சான் சென் என்பவர் ஒட்டி வந்தார். இருவரும் இந்த விபத்தில் எந்தவொரு காயமும் அடையவில்லை.

மூன்றாவது வாகனமான மோட்டார் சைக்கிளை 24 வயதான ஹபீப் முசமைல் பின் சக்ரானி என்பவர் ஓட்டிச் சென்றார்.முடி வெட்டும் வேலை செய்யும் இவருக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்து நடந்த போது, மாஸ்டா காரும் அவான்சா காரும் லாயாங்-லாயாங்கில் இருந்து குளுவாங் நோக்கி பயணித்தன. மோட்டார் சைக்கிள் எதிர்திசையில் பயணித்துக் கொண்டிருந்தது. மாஸ்டா கார், டொயோட்டா காரை இரட்டைக் கோடுகளில் முந்திச்செல்ல முயற்சி செய்தபோது, எதிர்வரும் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மாஸ்டா காருடன் மோதியதால், சைக்கிள் வீதியில் இருந்து, டொயோட்டா காரின் வலது பக்கம் மோதியது.

விபத்துடன் தொடர்புடைய மாஸ்டா கார் ஓட்டுநர் மொஹ்ட் நபிஹ் சபியுல்லா கைது செய்யப்பட்டு, குளுவாங் மாவட்ட காவல்துறை ஸ்ருப்நேஸ்வரன் தலைமையில் விசாரணை முன் எடுக்கப்படுகிறது. அவர் மீது 1987 வாகனப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 41(1) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்ட காயம் மற்றும் சிறுநீர் பரிசோதனை மூலம் அவரிடம் போதைப்பொருள் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Seorang penunggang motosikal maut dalam kemalangan tiga kenderaan di Jalan Tengku Wah Heng, Kluang. Kemalangan berlaku akibat cubaan memotong oleh pemandu Mazda. Polis menahan pemandu terlibat dan siasatan lanjut sedang dijalankan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *