சுதந்திரம் பெற்றும் மலேசியாவில் இன்னமும் இன விவகாரங்கள் நீடிப்பது ஏன்?-சாலே கெருவாக்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மே 7-

சபா மாநிலத்தில் நிலவி வரும் ஒற்றுமையும் நல்லிணக்கமும் விலைமதிப்பிட முடியாத சொத்துக்கள் என்பதால், அந்த போர்னியோ மாநிலத்தில் இனவாத அரசியல் வேரூன்ற கூடாது என்று. அனுமதித்துவிடக் கூடாது என அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சாலே சைட் கெருவாக் கூறியுள்ளார்.

சபா மாநிலத்தில் பல்வேறு இனத்தவர்கள் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருவதோடு, எந்த ஒரு தடையுமின்றி ஒருவர் மற்றொருவரின் பண்டிகைகளையும் கொண்டாடி வருகின்றனர்.ஆனால், சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளுக்கும் மேல் ஆகியும், மேற்கு மலேசியா அதாவது தீபகற்ப மலேசியாவில் இன்னமும் இன விவகாரங்கள் நீடித்து வருவது ஏன் என்று. முகநூலில் பதிவிட்ட ஒரு பதிவில் சாலே கேள்வி எழுப்பியுள்ளார்.

சபா மக்கள் தங்களின் சமயங்களை பரஸ்பர மதிப்புடனும் புரிந்துணர்வுடனும் பின்பற்றி வரும் வேளையில், மதங்களுக்கு இடையேயான நல்லிணக்கம் "அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக” இருந்து வருகிறது என்று, சபா அம்னோ பொருளாளருமான சாலே குறிப்பிட்டார்.

அரசியல் வேறுபாடுகள் இருப்பதை ஒப்புக் கொண்ட அவர், இவை இனம் அல்லது சமய அடிப்படையிலானவை அல்ல என்றும் சபா மக்களை பிளவுபடுத்தவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

"வெவ்வேறு அரசியல் பிரிவுகளை ஆதரிப்பதானது. நட்பையோ அல்லது அண்டை வீட்டுக்காரர்களுடனான உறவுகளையோ முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒரு காரணமல்ல. சபாவில் அரசியல் என்பது வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பு, இதர வாய்ப்புகள், சாலைகள், கல்வி மற்றும் சுத்தமான நீர் கிடைப்பது போன்ற மக்களின் தேவைகளில் அதிக கவனம் செலுத்துகிறது.

"வேறு இடங்களில் என்ன நடக்கிறது என்பது குறித்து விரிவாகக் கருத்துத் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை, ஆனால், ஒன்று மட்டும் தெளிவானது. அதாவது அவ்வகையான இனப் பிரச்சினைகள் சபாவில் வேரூன்ற அனுமதித்துவிடக் கூடா கூடாது.

நல்லிணக்கமும் ஒற்றுமையும் விலைமதிப்பிட முடியாத சொத்துகளாகும். அவை கட்டிக் காக்கப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும்.இனம், மதம் அல்லது அரசியல் நம்பிக்கையைப்
பொருட்படுத்தாமல், பரஸ்பர மரியாதையுடன் நாம் தொடர்ந்து வாழ்ந்து வருவோம்"என்று உசுக்கன் சட்டமன்ற உறுப்பினருமான சாலே தெரிவித்தார்.

Bekas Ketua Menteri Sabah, Salleh Said Keruak menegaskan perpaduan dan keharmonian kaum di Sabah amat bernilai dan perlu dipelihara. Beliau menolak politik perkauman dan menekankan kepentingan hidup bersama secara harmoni tanpa mengira kaum, agama atau ideologi politik.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *