பாகிஸ்தானுக்கு 3 விமானங்களில் துருக்கி ஆயுதங்களை அனுப்பியதா?

- Muthu Kumar
- 29 Apr, 2025
ஆறு விமானங்களில் துருக்கி ஆயுதங்களை அனுப்பியதாக வெளியான பரபரப்பு தகவல்களுக்கு அந்த நாட்டின் ஜனாதிபதி மாளிகை மறுப்பு தெரிவித்துள்ளது.
சமூக ஊடகங்களில் தீயாக பரவியுள்ள தகவலின் உண்மை நிலை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள துருக்கி ஜனாதிபதி மாளிகை, துருக்கியிலிருந்து வந்த ஒரு சரக்கு விமானம் எரிபொருள் நிரப்புவதற்காக பாகிஸ்தானில் தரையிறங்கியதாகவும், பின்னர் அது அதன் பாதையில் தொடர்ந்தது பயணப்பட்டதாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்களின் அறிக்கைகளுக்கு வெளியே வெளியிடப்படும் ஊகச் செய்திகளை நம்பியிருக்கக் கூடாது என்றும் துருக்கி ஜனாதிபதி மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.பல்வேறு செய்தி நிறுவனங்கள் பாகிஸ்தானுக்கு துருக்கி ஆயுதங்களை அனுப்புவதாகக் கூறி, துருக்கி சரக்கு விமானத்தின் படத்தை வெளியிட்ட நிலையிலேயே அந்த நாட்டின் ஜனாதிபதி மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
கடந்த வாரம் ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த கொடிய பயங்கரவாத தாக்குதலை துருக்கி கண்டித்தது, இந்த தாக்குதலால் ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
இஸ்லாமிய மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஜம்மு-காஷ்மீர் பகுதி, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான கடுமையான பிராந்திய தகராறின் மையமாக நீண்ட காலமாக இருந்து வருகிறது.
பஹல்காம் தாக்குதல் சம்பவம் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளை பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவடைய செய்துவிட்டன, இது சாத்தியமான இராணுவ நடவடிக்கை குறித்த கவலையைத் தூண்டியுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *