கலைப்புப் பரிந்துரை காலாவதியான ஒன்று அம்னோவுடன் ஒப்பிடும்போது பெர்சத்துவே பெரிய கட்சி!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மே 4-

பெர்சத்து கட்சி கலைக்கப்பட்டு அதன் உறுப்பினர்கள் அனைவரும் மீண்டும் அம்னோவுக்குத் திரும்ப வேண்டும் என்று விடுக்கப்பட்டுள்ள ஒரு பரிந்துரை காலாவதியான ஒன்று.

இத்தகைய பரிந்துரையை முன்வைத்திருக்கும் அம்னோவின் மூத்த உறுப்பினர் ஒருவர் இன்னமும் "பழைய கனவுகளில் தவழ்ந்து கொண்டிருக்கின்றார் என்று. பெர்சத்து கட்சியின் உயர் தலைமைத்துவமன்ற உறுப்பினர் வான் சைஃபுல் வான் ஜன் வருணித்திருக்கின்றார்.

பெர்சத்து போன்ற ஒரு பெரிய கட்சியைக் கலைத்து விடுமாறு விடுக்கப்பட்டுள்ள பரிந்துரை பொருந்தாது என்றும் அவர் கூறியுள்ளார்.புதிய அரசியல் யுகச் சூழ்நிலையில், அரசாங்கத்தை அமைப்பதற்காக பல்வேறு கட்சிகள் பக்காத்தானில் இணைந்து வருவதைக் காண முடிவதாக வான் சைஃபுல் தெரிவித்துள்ளார்.
சிறிய கட்சியாக இருந்தால், அதைக் கலைப்பது குறித்து பரிசீலிப்பது பொறுத்தமாக இருக்கலாம். (பெர்சத்து கலைக்கப்பட வேண்டும் என்பது) அம்னோ மூத்த தலைவர் ஒருவர் விடுத்திருக்கும் பரிந்துரையாகும். ஆதலால், அவரின் இத்தகைய கருத்து காலாவதியான ஒன்று.

'இப்போது நாம் புதிய அரசியல் யுகத்தில் இருக்கின்றோம். ஒரு கூட்டணியில் பல கட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. அதன் பின்னர் பல கூட்டணிகள் சேர்ந்து அரசாங்கத்தை அமைத்து வருகின்றன.
இனியும் பொருத்தமற்ற அல்லது பொருந்தாத காலாவதியான முந்தைய கால கனவுகளில் மிதந்துக் கொண்டிருப்பவர்களினால் உணர முடியாமல் இருக்கக் கூடிய ஓர் உண்மை இதுவாகும் என்று. முகநூல் பதிவொன்றில் வான் சைஃபுல் தெரிவித்தார்.

செமாங்காட் 46 கட்சிக்கு நடந்ததுபோல். கட்சியைக் கலைத்துவிட்டு மீண்டும் அம்னோவுக்குத் திரும்புமாறு, அம்னோ மூத்த தலைவர்கள் கிளப்பின் செயலாளர் முஸ்தபா யாக்கோப் விடுத்திருக்கும் கோரிக்கை குறித்து கருத்துரைக்கும்போது, தாசேக் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினருமான வான் சைஃபுல் தெரிவித்தார்.

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் ஆதரவை மட்டுமே அம்னோ பற்றிக் கொண்டிருக்கிறது என்று குற்றஞ்சாட்டியதோடு, அக்கட்சி ஒரு பெரிய கட்சியும் அல்ல என்றும் வான் சைஃபுல் கூறினார்.சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவாமல் இருந்திருந்தால், மக்களவையில் பெர்சத்து கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அம்னோவைக் காட்டிலும் அதிகமாக இருந்திருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

Ahli Majlis Tertinggi Bersatu, Wan Saiful Wan Jan menolak cadangan agar Bersatu dibubar dan kembali ke UMNO. Beliau menyifatkan cadangan itu sebagai ketinggalan zaman dan menegaskan bahawa landskap politik kini melibatkan gabungan pelbagai parti membentuk kerajaan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *