பள்ளி வேனில் இறந்து கிடந்த 5 வயது சிறுவன்!

- Sangeetha K Loganathan
- 01 May, 2025
மே 1,
5 வயது சிறுவன் பள்ளி வேனிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காலை 7.30 மணிக்கு ஜொகூரில் உள்ள Iskandar Puteri பகுதியில் உள்ள பள்ளியில் பிள்ளைகளை இறக்கி விட்டு விட்டு, வீடு திரும்பியதாகவும் மீண்டும் நண்பகல் 12 மணிக்கு வேனில் சிறுவன் ஒருவன் மயங்கிய நிலையில் காணப்பட்டது சுல்தானா அமினா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 5 வயது சிறுவன் முன்னமே இறந்து விட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக 56 வயது பள்ளி வேன் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணைக்காக 7 நாள்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் Iskandar Puteri மாவட்டக் காவல் ஆணையர் M Kumarasan தெரிவித்தார். காலையிலிருந்து பள்ளி வேனிலேயே இருந்ததால் 5 வயது சிறுவன் உயிரிழந்திருக்கலாம் என்றும் வேன் ஓட்டுநரின் அலட்சியமும் 5 வயது சிறவனின் இறப்பிற்கு ஓர் காரணம் என Iskandar Puteri மாவட்டக் காவல் ஆணையர் M Kumarasan தெரிவித்தார்.
Seorang kanak-kanak lelaki berusia 5 tahun ditemui meninggal dunia dalam van sekolah di Iskandar Puteri, Johor. Pemandu van berusia 56 tahun telah ditahan selepas disyaki cuai sehingga menyebabkan kematian mangsa yang ditinggalkan dalam van dari pagi.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *