வாகனத்தில் பதுக்கப்பட்டிருந்த RM 585,664 மதிப்பிலானப் போதைப்பொருள்!

top-news

மே 4,

சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்திலிருந்து 18.032 கிலோ எடையிலானப் போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கிளாந்தான் மாநிலச் சுங்கத் துறை இயக்குநர் WAN JAMAL ABDUL தெரிவித்தார். காலை 7.18 மணியளவில் KAMPUNG RESAK சாலையில் சந்தேகத்திடமான PROTON ISWARA ரக வாகனத்தில் மூட்டைகள் இருப்பதாகப் பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்ததாக WAN JAMAL ABDUL தெரிவித்தார்.

சந்தேகத்திற்குரிய வாகனத்தைச் சோதனையிட்டதில் 17 மூட்டைகளில் METHAMPHETAMIN வகை போதைப்பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்ததாக WAN JAMAL ABDUL தெரிவித்தார். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு RM 585,664 என கணக்கிடப்பட்டுள்ளதாகவும் வாகனத்தின் பதிவு எண் மூலமாக வாகனத்தின் உரிமையாளரைத் தேடி வருவதாக கிளாந்தான் மாநிலச் சுங்கத் துறை இயக்குநர் WAN JAMAL ABDUL தெரிவித்தார்.

Pihak kastam Kelantan merampas dadah jenis methamphetamine seberat 18.032 kilogram bernilai RM 585,664 dari sebuah Proton Iswara yang ditinggalkan di Kampung Resak. Siasatan sedang dijalankan untuk mengesan pemilik kenderaan tersebut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *