கோமு புதுக்கவிதைப் போட்டி! RM 1,500 முதல் பரிசு!

top-news
FREE WEBSITE AD

மலேசியக் கவிஞர் கோ.முனியாண்டி அவர்களின் நினைவாக “கோமு புதுக்கவிதைப் போட்டி” ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஏற்பாட்டில் வழக்கறிஞர் ம.மதியழகன் அவர்களின் ஆதரவுடந் இப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மலேசியர்கள் அனைவரும் இப்போட்டியில் பங்கேற்கலாம்.

கோமு கவிதைப் போட்டிக்கான முதல் பரிசு வெ.1500,  இரண்டாம் பரிசு வெ.1000, மூன்றாம் பரிசு வெ.700 வழங்கப்படுவதோடு 4 முதல் 10 வரையில் தேர்வாகும் கவிதைகளுக்கு ஆறுதல் பரிசாகத் தலா வெ.100 வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1960 ஆம் ஆண்டு தனது 15 வயதில் வானொலியின் இளைஞர் உலகம் எனும் பகுதியில் எழுதத் தொடங்கிய கவிஞர் கோ.முனியாண்டி தொடர்ந்து இலக்கியப் பணிகளைச் செய்து வந்த கோ.மு இலக்கியம் சார்ந்த கருத்தரங்குகளையும் பட்டறைகளையும் முன்னெடுத்தார். 1997 ஆம் ஆண்டு தமிழ் ஓசை நாளிதழில் சித்தியாவான் வட்டார நிருபராகவும் பணியாற்றியுள்ளார். கோ. முனியாண்டி நவம்பர் 11, 2024 தனது 76 ஆவது வயதில்  இயற்கை எய்தினார்.

இப்புதுக்கவித்தைப் போட்டி தொடர்பில் மேல் விபரம் அறிய 016-5684302 சிவாலெனின் அவர்களை அணுகவும்..

"Ko. Muniandy Poetry Competition" diadakan untuk mengenang penyair Ko. Muniandy. Pertandingan ini menawarkan hadiah wang tunai dan terbuka kepada semua rakyat Malaysia. Untuk maklumat lanjut, hubungi Sivalean di 016-5684302.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *