6 வீடுகள் தீயில் கருகின! மூச்சுத் திணறலுடன் ஆடவர் மீட்பு!

- Sangeetha K Loganathan
- 05 May, 2025
மே 5,
நேற்றிரவு கோலாலம்பூர் Bandar Tun Razak குடியிருப்புப் பகுதியில் உள்ள 6 வீடுகள் தீயில் கருகியதாகக் கோலாலம்பூர் தீயணைப்பு மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Mustafa Kamal Mohd Arih தெரிவித்தார், நேற்றிரவு 10.49 மணிக்குத் தீ விபத்துக் குறித்தான அவசர அழைப்பைப் பெற்றதும் 43 பேர் கொண்ட தீயணைப்பு வீரர்கள் கொண்ட குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்டதாக Mustafa Kamal Mohd Arih தெரிவித்தார்.
வீடுகளில் கரும்புகைகள் சூழ்ந்த நிலையில் 45 வயது ஆடவர் மூச்சுத் திணறால் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் தற்போது அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் Mustafa Kamal Mohd Arih தெரிவித்தார். இந்த தீ விபத்தில் மொத்தம் 6 வீடுகள் பாதிக்கப்பட்டதாகவும் அதில் 3 வீடுகள் முழுமையாகத் தீயில் கருகியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்தால் எந்தவோர் உயிரிழப்பும் ஏற்படவில்லை என உறுதிச் செய்யப்பட்டுள்ள நிலையில் நள்ளிரவு 12.06 மணிக்குத் தீ முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Enam buah rumah musnah dalam kebakaran di Bandar Tun Razak, Kuala Lumpur malam tadi. Seorang lelaki berusia 45 tahun diselamatkan dalam keadaan sesak nafas. Tiada kematian dilaporkan dan api berjaya dikawal pada jam 12.06 tengah malam.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *