அதிகரிக்கும் கேபிள் திருட்டுகள்! காவல்துறை சிறப்புக் குழு நடவடிக்கை!

- Sangeetha K Loganathan
- 05 May, 2025
மே 5,
அரசு பொது சொத்துகளைச் சேதப்படுத்தும் அல்லது திருடும் கும்பலுக்கு எதிராகச் சிறப்புத் தனிப்படை அமைக்கப்படவிருப்பதாகப் பகாங் மாநிலக் காவல் துறை தலைவர் Datuk Seri Yahaya Othman தெரிவித்தார். முக்கியமாகக் கேபிள் திருட்டுகளில் ஈடுபடும் கும்பலுக்கு எதிராக இந்த தனிப்படை அமைக்கப்படவிருப்பதாக அவர் தெரிவித்தார். கடந்த 2023 ஆம் ஆண்டை விடவும் 2024 ஆம் ஆண்டு கேபிள் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக Datuk Seri Yahaya Othman தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டு மொத்தம் 414 கேபிள் திருட்டுச் சம்பவங்கள் பதிவுச் செய்யப்பட்டிருப்பதாகவும் கேபிள் திருட்டில் ஈடுபட்ட 100 பேர் கைது செய்யப்பட்டதையும் அவர் குறிப்பிட்டார். கேபிள் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது மட்டுமின்றி திருடப்படும் கேபிள்களை மலிவு விலையில் வாங்கும் மறுசுழற்சி மையங்களையும் அடையாளம் கண்டுள்ளதாகவும் முக்கிய உலோக மறுசுழற்சி மையங்களில் காவல்துறையினர் சோதனையை மேற்கொண்டு வருவதாகவும் Datuk Seri Yahaya Othman தெரிவித்தார்.
Peningkatan kes kecurian kabel di Pahang mendorong polis menubuhkan pasukan khas untuk menangani sindiket ini. Sebanyak 414 kes direkodkan pada 2024 dan 100 individu telah ditahan, termasuk pusat kitar semula yang membeli kabel curi.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *